“விராட் கோலி அற்புதமான இன்னிங்ஸ்.. என்ன செய்யனும்னு அவருக்கு தெரியும்” – ரோஹித் சர்மா பேட்டி!

0
4625
Rohit

இந்தியாவில் நடக்க இருக்கும் உலகக்கோப்பைக்கு செல்வதற்கு முன்னால், இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆசிய கோப்பை மிகவும் முக்கியமானதொடராக அமைந்திருக்கிறது.

எனவே இந்த தொடரில் பாகிஸ்தானை வெல்வது என்பது இந்திய அணியின் தன்னம்பிக்கையை மிகவும் அதிகரிக்கும். இந்த நிலையில் பாகிஸ்தான் போட்டிக்கு மிகுந்த முக்கியத்துவம் இருந்தது. ஆனால் மழை முதல் சுற்றுப் போட்டியை நடக்க விடவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தான் அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தி இருக்கிறது.

இந்த போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி சதங்கள் அடித்தனர். இவர்களுடைய சதங்களுக்கு அடித்தளம் அமைத்தது துவக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில்.

பாகிஸ்தான் அணியின் புதியப்பந்து வேகப்பந்துவீச்சை சமாளித்து விட்டால் பிறகு ரன்கள் வரும். ஆனால் அதைச் சமாளிப்பது அவ்வளவு சாதாரணம் கிடையாது. அந்த கடினமான வேலையை ரோகித் சர்மா மற்றும் கில் செய்து கொடுத்தது இந்திய அணியின் வெற்றிக்கு பெரிய காரணமாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா “சிறிது நேரம் விளையாடுவதற்கு மைதானத்திற்குள் செல்ல விரும்பினோம். ஆனால் இது மைதான ஊழியர்களால் மட்டுமே சாத்தியமானது. மைதானத்தை முழுவதும் மூடி அகற்றுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது என்பது எனக்கு தெரியும். எங்கள் அணியின் சார்பாக அவர்களுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒட்டுமொத்தமாக நேற்று இருந்து அற்புதமான செயல் திறன் வெளிப்பட்டது. நாங்கள் தொடங்கும் பொழுது விக்கெட் நன்றாக இருந்தது. அதே சமயத்தில் மழையுடன் நாங்கள் சரி செய்து கொள்ள வேண்டி இருந்தது.

அனுபவம் வாய்ந்த விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவருக்கும் ஆரம்பத்தில் நிலைமை பழக கொஞ்சம் நேரம் தேவைப்படும். பின்பு ஆட்டத்தை எடுத்துச் செல்ல முடியும் என்று அவர்களுக்கு தெரியும்.

பும்ரா பந்தை இருபுறத்திலும் மிகச் சிறப்பாக ஸ்விங் செய்தார். அவருக்கு வயது 27 தான் ஆகிறது. இந்த வயதில் அவர் விளையாடாமல் இருப்பது நல்லது இல்லை. ஆனால் அவர் பந்து வீசிய விதம் அவர் எப்படி என்பதை காட்டியது.

நாங்கள் எப்படி பேட்டிங் செய்தோம் என்று பார்க்கும் பொழுது விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் மற்றும் துவக்க ஆட்டக்காரர்கள் எல்லோரிடமும் நல்ல பாசிட்டிவான மனநிலை காணப்பட்டது. விராட் கோலியின் இன்னிங்ஸ் அற்புதமாக இருந்தது. கேஎல்.ராகுல் காயத்திலிருந்து திரும்ப வந்து, டாஸ் போடப்படுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு அணியில் சேர்ந்து, பின்பு இப்படி ஒரு இன்னிங்ஸ் விளையாடி இருப்பது, அவருடைய மனநிலை எப்படி? ” என்று காட்டுகிறது என்று கூறியிருக்கிறார்!