கோலி 101 செஞ்சுரி கூட அடிப்பாரு; ஆனா இந்த சச்சின் சாதனையை எத்தனை வருஷம் ஆனாலும் முறியடிக்க முடியாது – கைஃப் வியப்பான கருத்து!

0
5296
Kaif

உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்!

இவர் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் சதத்தில் சதத்தை அதாவது நூறு சதங்களை அடித்து நொறுக்கி யாரும் எட்ட முடியாத உயரத்தில் தனிப்பட்ட சாதனைகளில் பலவற்றிலும் நிற்கிறார்!

- Advertisement -

தற்போதைய கிரிக்கெட் உலகில் விளையாடி வரும் பேட்ஸ்மேன்களில் சச்சினின் குறிப்பிட்ட சாதனைகளை உடைப்பதற்கான வாய்ப்பில் இருக்கக்கூடிய வீரர்களில் இங்கிலாந்தின் ஜோ ரூட்டும், இந்தியாவின் விராட் கோலியும் மிக முக்கியமான இடத்தில் இருக்கிறார்கள்.

விராட் கோலி தற்பொழுது நடந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது 29ஆவது டெஸ்ட் சதத்தை அடித்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியா தாண்டி அவருக்கு வெளி மண்ணில் ஒரு சதம் வந்திருக்கிறது.

விராட் கோலி தற்பொழுது ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 76 சதங்கள் அடித்து இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 29, ஒருநாள் கிரிக்கெட்டில் 46, டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம் என அடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த வகையில் விராட் கோலி ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த சச்சினின் சாதனையை முறியடிக்கும் தூரத்தில் வெகு பக்கமாக இருக்கிறார். மிகக்குறிப்பாக ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சின் அடித்துள்ள 50 சதங்களை வெகு சீக்கிரத்தில் அவரால் முறியடிக்க முடியும்.

இந்த நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் இடம் விராட் கோலி சச்சின் சாதனையை முறியடிப்பாரா என்று கேட்ட பொழுது ” விராட் கோலி 100 சதங்கள் அடிப்பார். அவருக்கு தற்பொழுது 34 வயதுதான் ஆகிறது இன்னும் 5 6 ஆண்டுகள் விளையாடுவார். எனவே அவரால் சச்சினின் 100 சதங்கள் என்கின்ற சாதனையை தாண்ட முடியும்.

ஆனால் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்பொழுதும் சச்சினுக்கு பின்னால்தான் நிற்பார். அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் அடித்துள்ள 51 சதங்களை அடிக்க முடியாது. இந்த வகையில் விராட் கோலி சச்சின் 100 சதங்களை தாண்டினாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த 51 சதங்களையும் ரன்களையும் விராட் கோலியால் தாண்ட முடியாது!” என்று கூறியிருக்கிறார்!

விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக விளங்கி வந்தாலும் ஆனால் அவர் ஆரம்ப காலத்தில் வெளிப்படுத்தி வந்த சீரான பேட்டிங் அவர் இடத்தில் இப்போது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவர் ரன்கள் அடித்தாலுமே அவர் விக்கெட்டை தருகின்ற முறை மிகவும் எளிமையான ஒன்றாக இருக்கிறது. பந்துவீச்சாளர்கள் முன்புபோல அவரது விக்கட்டுக்கு கடினப்பட வேண்டிய நிலையில் இல்லை என்பது தான் இதில் கவலையான விஷயம்!