இந்திய இளம் வீரர் வைபவ் சூரியவன்சிக்கு எல்லோருக்கும் போல ஒரு பலவீனம் இருக்கவே செய்கிறது என ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியிருக்கிறார்.
நேற்று டெல்லி அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மெதுவான பந்தை சரியாக கணிக்காமல் தூக்கி அடித்து கிடைத்த தொடக்கத்தை வீணடித்தார். தற்போது இது குறித்து அவருடைய பேட்டிங் பயிற்சியாளர் பேசியிருக்கிறார்.
வைபவ் சூரியவன் சிக்கு சிறந்த தொடக்கம் கிடைக்க செய்கிறது. ஆனால் அதை பயன்படுத்தி அவரால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் இருந்து வருகிறது. இது அவருக்கு தனிப்பட்ட முறையிலேயே பிரச்சனையை உருவாக்கி உள்ளது.
இதுகுறித்து விக்ரம் ரத்தோர் பேசும்பொழுது “யாரும் முழுமையானவர்கள் இல்லை. எல்லோரிடமும் ஆங்காங்கே சில பலவீனங்கள் இருக்கும். மெதுவான பந்தை ஆடுவது அவருக்கு பலவீனம் கிடையாது. மெதுவான ஆடுகளத்தில் எல்லோருக்குமே இது ஒரு சிக்கல்தான்”
“தனக்கு கிடைக்கும் தொடக்கத்தை பெரிய ஸ்கோராக அவர் மாற்றுவார் என்று நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். அதற்கான திறமை அவருக்கு இருக்கிறது. நிச்சயம் அவரால் இதை செய்ய முடியும்”
இதையும் படிங்க: விராட் கோலியை விட.. இவர் எங்கள் அணியில் இருப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம்.. சிறந்த அறிவு அவருக்கு இருக்கு – ஆர்சிபி பவுலர்
“முதலில் யாராக இருந்தாலும் தங்களுடைய பலம் என்னவோ அதற்கு விளையாட வேண்டும். விராட் கோலி பெரிய ஹிட்டர் கிடையாது. ஆனால் அவர் தனது திறமையை உணர்ந்து அதற்கு ஏற்ற வகையில் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் விளையாடுவார். அதுபோல வைபவ் சூரியவன்சி கற்றுக் கொண்டு விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.