நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகள் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தற்போது முதல் அணியாக முன்னேறி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ஆர்சிபி அணியின் முன்னணி பவுலரான ஜாஸ் ஹாஸில் வுட் பெங்களூர் அணியின் அனுபவ வீரர் குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 17 வருடங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை முதல் முறையாக வெற்றி பெற்று அசத்தியது. பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டு துறைகளிலும் வலுவாக இருந்த காரணத்தால் இந்த முறையும் அந்த அணி 13 போட்டிகளில் 9 போட்டிகள் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறி இருக்கிறது. அந்த அணிக்கு விராட் கோலி மிகவும் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார்.
அதுமட்டுமல்லாமல் பட்டிதார், படிக்கல், டிம் டேவிட் என அதிரடி ஆட்டக்காரர்களும் புவனேஸ்வர் குமார் ஹாசில் உட் என தரமான மௌலிங்கும் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன. எனவே இந்த முறையும் பெங்களூர் அணி இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஆர்சிபி பவுலர் ஹாசில் வுட் புவனேஸ்வர் குமார் பெங்களூர் அணிக்கு பெரிய நம்பிக்கை சேர்க்கிறார் எனவும், அவர் ஆடுகளத்தின் சூழ்நிலையை நன்றாக அறிந்தவராக இருக்கிறார் என்றும் அவரைப் பற்றி சில விஷயங்களை பேசி இருக்கிறார். இது குறித்து அவர் பேசும்போது “புவனேஸ்வர் குமார் பெங்களூர் அணியில் இருப்பது உண்மையிலேயே அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன்.
அவர் முக்கியமான சமயத்தில் விக்கெட்டுகள் வீழ்த்துகிறார். ரன்விகிதத்தை கட்டுப்படுத்துகிறார், அது மட்டுமல்லாமல் மைதானத்தைப் பற்றிய சிறந்த அறிவும் கொண்டவராக இருக்கிறார். எனவே அவர் அணியில் இருப்பது உண்மையிலேயே அதிர்ஷ்டம் அளிக்க கூடிய விஷயமாகும்” என்று அவரைப் பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார்.






