இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி இன்று பிரமிங்காமில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் மிகவும் தீவிரமான முறையில் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஒரு நாள் தொடருக்கு சுப்மான் கில் கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளார். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய அணியில் மீண்டும் இணைந்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி இதற்கு முன்னர் நடைபெற்ற டி20 தொடரில் அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்து மோசமான நிலையில் இருக்கிறது. எனவே அந்த சிக்கலில் இருந்து மீள்வதற்கு இந்த ஒரு நாள் தொடரில் கட்டாயம் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். இந்த சூழ்நிலையில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அணியின் கேப்டன் கில் ஒரு நாள் தொடரில் ஆர்வத்தை அதிகரிக்க மீண்டும் மூன்று அல்லது நான்கு நாடுகள் பங்குபெறும் முத்தரப்பு தொடர்களின் நடத்த வேண்டியது அவசியம் என்று பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “இரண்டு அணிகள் தங்களுக்கு பரிட்சயம் இல்லாத சூழலில் விளையாடச் செல்லும் வகையிலான பல நாட்டுத் தொடர்களை நாம் மீண்டும் கொண்டுவர வேண்டும். நான் 50 ஓவர் கிரிக்கெட்டை பார்த்து வளர்ந்தவன். எனவே அதனை 40 ஓவர்களாக மாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இருப்பதாக தெரியவில்லை” என்று பேசி இருக்கிறார்.