வயிறு எரியுது – தோனி மற்றும் விஜய் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்த பிரபல இயக்குனர் ஆதங்கம்

0
182
Vijay and Dhoni

முன்னாள் இந்திய கேப்டன் தோனி மற்றும் நடிகர் விஜய் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தைப் பார்த்தது முதல் தனது வயிறு 274 டிகிரியில் கொதிப்பதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். தனது நண்பரும் இயக்குனருமான நெல்சன், தோனியும் விஜயும் சந்தித்துக் கொள்ளும் தருணத்தில் தன்னை அழைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இந்த ட்வீட்டை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

பீஸ்ட் திரைப்படத்திற்காக கோகுலம் ஸ்டூடியோவில் பரபரப்பாக ஷூட்டிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் நடிகர் விஜய். அதே ஸ்டுடியோவில் தோனியும் ஒரு விளம்பர படப்பிடிப்பிற்காக கலந்து கொள்ள வந்தார். அப்போது இருவரும் சந்தித்துக் கொண்டனர். இருவரும் இணைந்து சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். தமிழகத்தில் பெரிய ரசிகர் கூட்டங்களை உடைய இரண்டு முக்கியமான நபர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவ தொடங்கியது.

- Advertisement -

பீஸ்ட் திரைப்பட இயக்குனரான நெல்சன் முதல் பல்வேறு ரசிகர்கள் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களின் அன்பை வெளிப்படுத்தினார். கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட புதிதில் தோனியும் விஜயும் சந்தித்துக் கொண்டனர். அதன் பிறகு சுமார் 13 ஆண்டு காலம் கழித்து மறுபடியும் விஜய்யும் தோனியும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதை ரசிகர்கள் வெகுவாக அகமகிழ்ந்து பார்த்து வருகிறார்கள்.

இதைக் கண்ட பிறகு தானா சேர்ந்த கூட்டம், நானும் ரவுடிதான் போன்ற படங்களின் இயக்குநரான விக்னேஷ் சிவன் ஒரு ட்வீட்டை போட்டுள்ளார். தனது நெருங்கிய நண்பரும் பீஸ்ட் திரைப்படத்தின் இயக்குனருமான நெல்சன் தன்னை அழைத்து இருக்கலாம் என்று அது விக்னேஸ்வரன் கூறியுள்ளார். தன்னை அழைக்காமல் தோனியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதால் தனது வயிறு 274 டிகிரியில் இருப்பதாகவும் கூறியுள்ளார் விக்னேஷ் சிவன்.

மேலும் இந்தப் புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறும் அதில் தன்னை தானே இணைத்துக்கொண்டு போட்டோஷாப் மூலமாக தானும் தோனியுடன் போட்டோ பிடித்தது போல செய்து விடுகிறேன் என்றும் நகைச்சுவையாக கூறியுள்ளார் விக்னேஷ் சிவன். சொன்னதோடு நில்லாமல் உண்மையாகவே தானும் தோனியும் நிற்பதுபோல போட்டோஷாப் செய்து அதை இணையத்தில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். கூடவே சின்னக் கவுண்டர் திரைப்படத்தில் வரும் ‘எனக்கு வேற வழி தெரியல ஆத்தா’ என்ற வசனத்தையும் இணைத்து அற்புதமான மீமாக வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

- Advertisement -

தோனி மீது இருக்கும் பிரம்மாண்ட பாசமும் தனது நண்பன் மீது காட்டிய விளையாட்டு கோபமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.