வீடியோ.. ராங் சைட்.. காற்றில் பறந்த கேஎல்.ராகுல்.. வாயடைத்த விராட் கோலி.. இந்தியா அசத்தலான கம்பேக்.. சிக்கிய பங்களாதேஷ்!

0
1007
Rahul

தற்பொழுது இந்தியா பங்களாதேஷ் அணிகள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் புனே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்திக் கொண்டு வருகின்றன.

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் பேட்டிங் செய்வது என்ற அறிவித்தது. பங்களாதேஷஷ் அணியில் ஷகிப் அல் ஹசன் டஸ்கின் அகமத் விளையாடவில்லை. இந்திய அணியில் மாற்றம் இல்லை.

- Advertisement -

பங்களாதேஷ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த தன்ஷித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடிய அடுத்து அதிரடியான துவக்கத்தைத் தந்தார்கள்.

இதற்கிடையில் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்து பந்து வீசமுடியாமல் வெளியேறியது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது. அதே சமயத்தில் பங்களாதேஷ் துவக்க ஆட்டக்காரர்களின் அதிரடியும் தொடர்ந்தது.

இதைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் கிடைத்தது. தன்ஷித் ஹசன் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து கேப்டன் நஜிபுல் சாந்தோவை ரவீந்திர ஜடேஜா எட்டு ரன்களில் ஜடேஜா வெளியேற்றினார்.

- Advertisement -

இதனால் நான்காவது விக்கெட்டுக்கு பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரர் ஆல் ரவுண்டர் மெகதி ஹசன் மிராஸ் விளையாட வந்தார். அந்த நேரத்தில் ரோகித் சர்மா சிராஜை இரண்டாவது ஸ்பெல்லுக்கு கொண்டு வந்தார்.

அந்த ஓவரில் இடுப்பிற்கு வந்த பந்தை கிளான்ஸ் ஆட மெகதி ஹசன் முயற்சி செய்ய, பந்து கிளவுஸில் பட்டு லெக் சைடு பின்புறம் சென்றது. வலது கை விக்கெட் கீப்பரான கேஎல்.ராகுலுக்கு பந்து இடது புறம் காற்றில் இருந்தது.

இந்த நிலையில் அபாரமாக தனக்கு எதிரான பக்கத்துக்கு டைவ் அடித்து கேஎல் ராகுல் அற்புதமாக கேட்ச் பிடித்து அசத்தி மெகதி ஹசனை வெளியேற்றினார். பகுதி நேர விக்கெட் கீப்பராக இருந்து விளையாடிக் கொண்டிருக்கும் கேஎல் ராகுல் செயல்பட்ட விதம், முதல் நிலை விக்கெட் கீப்பர்கள் போல இருந்தது. அவர் விக்கெட் கீப்பிங் கடுமையாக உழைத்திருப்பது தெரிகிறது.

மேலும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த லிட்டன் தாஸ் ரவீந்திர ஜடேஜா பந்தை நேராக தூக்கி அடித்து சுப்மன் கில் இடம் 68 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தற்பொழுது 30 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து பங்களாதேஷ் அணி விளையாடிக் கொண்டிருக்கிறது.