வீடியோ.. கிரிக்கெட் வரலாற்றில் மோசமான ரிவ்யூ.. பட்லரை கலாய்க்கும் ரசிகர்கள்.. இங்கிலாந்து நியூசிலாந்து போட்டியில் ருசிகரம்.!

0
276

நியூசிலாந்து அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து t20 மற்றும் ஒரு நாள் போட்டி தொடரில் விளையாட இருக்கிறது. உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக தங்களை தயார் படுத்திக் கொள்ளும் வகையில் இந்த தொடரானது நடைபெற்று வருகிறது.

இரண்டு அணிகளுக்கும் இடையேயான நான்கு போட்டிகளைக் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று இங்கிலாந்தில் உள்ள செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் வைத்து நடைபெற்றது . இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதோடு தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றிருக்கிறது .

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே எடுத்தது . இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் லியூக் வுட் மற்றும் பிரைடன் கார்ஸ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து அதிரடியாக ஆடிய இங்கிலாந்து அணி 14 ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி பெற்றது . அந்த அணியின் டேவிட் மலான் 54 ரன்கள் ஹாரி புரூக் 43 ரண்களும் எடுத்து ஆட்டம் விளக்காமல் இருந்தனர்.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுமே சிறப்பாக இருந்தது . ஆனாலும் இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதோடு பலரையும் சிரிக்க வைத்திருக்கிறது. நேற்றைய போட்டியில் 16 வது ஓவரை லிவிங் ஸ்டென் வீசிக்கொண்டிருந்தார். அப்போது நியூசிலாந்து அணியின் கிளன் பிலிப்ஸ் களத்தில் இருந்தார்.

பதினாறாவது ஓவரின் மூன்றாவது பந்தை தடுத்து ஆடினார் பிலிப்ஸ் . அந்தப் பந்து மட்டையின் கீழ் பாகத்தில் பட்டது. ஆனால் ஜோஸ் பட்லர் பந்து கால் காப்பில் பட்டதாக கருதி டிஆர்எஸ் ரிவ்யூ எடுத்தார். இதனைத் தொடர்ந்து மூன்றாவது நடுவர் தீர்ப்பை பரிசோதித்துப் பார்த்தபோது பந்து பேட்டில் பட்டது மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் தெளிவாகத் தெரிந்தது. மேலும் பிலிப்ஸ்சின் கால் காப்பு அவரது பேட்டிக்கு அருகில் கூட இல்லை.

- Advertisement -

இதனைப் பார்த்து தன்னைத் தானே நொந்து கொண்ட ஜோஸ் பட்லர் தனது கைகளை வைத்து முகத்தை மறைத்துக் கொண்டதோடு தன்னை நினைத்து சிரித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இதேபோன்று பேட்டில் பட்டதற்கு டிஆர்எஸ் எடுத்தது நம் அனைவருக்கும் நினைவு இருக்கலாம்.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெற இருக்கிறது. மேலும் டி20 தொடரை தொடர்ந்து இரண்டு அணிகளும் நான்கு போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரிலும் விளையாட இருக்கின்றன . மேலும் உலகக் கோப்பையின் துவக்க போட்டியில் அக்டோபர் ஐந்தாம் தேதி இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணி எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பட்லர் ரிவ்யூ எடுத்த வீடியோ இந்தப் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.