வீடியோ.. ஹாட்ரிக் விக்கெட் தூக்கிய ஸ்டார்க்.. இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி அடித்த ஆஸி!

0
1284
Starc

தற்போது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த பயிற்சி ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் மழையால் பாதிக்கப்பட்டாலும், மழை நின்ற காரணத்தினால் 23 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி பயிற்சி போட்டியை பயிற்சி போட்டி போல பயன்படுத்திக் கொண்டது. டேவிட் வார்னர், மிச்சல் மார்ஸ் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோர் பேட்டிங் செய்ய வரவில்லை. மேலும் பந்துவீச்சாளர் ஸ்டார்க்கை முன்கூட்டியே அனுப்பி வைத்து பரிசோதித்தது.

ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்மித் 55(42), அலெக்ஸ் கேரி 28(25), கேமரூன் கிரீன் 34(26), மிட்சல் ஸ்டார்க் 24(22) என ரன்கள் எடுக்க 23 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்தது.

இதற்கடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய நெதர்லாந்து அணியின்
மேக்ஸ் டொனால்டை ஐந்தாவது பந்தில் ஸ்டார்க் எல்பிடபிள்யூ செய்தார். ஆறாவது பந்தில் வெஸ்லி பரேசியை கிளீன் போல்ட் செய்தார். மீண்டும் தன்னுடைய இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் பாஸ் டி லீடை கிளீன் போல்ட் செய்து ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

இந்த போட்டியில் ஸ்டார்க் பந்துவீச்சை பார்க்கும் பொழுது, இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வீசியது போலவே இல்லை. அவர் பந்து உடைய ரிலீஸ் வேகம் எல்லாமே வேறு விதமாக இருந்தது. வித்தையை இறக்க வேண்டிய நேரத்தில் இறக்குவதற்காக மறைத்து வைத்தது போல இருக்கிறது.

தற்போது ஸ்டார்க் பந்து வீசும் விதம் இந்திய அணிக்கு எச்சரிக்கை கொடுப்பது போல இருக்கிறது. ஏற்கனவே ஐபிஎல் தொடருக்கு முன்பாக சென்னையில் வைத்து இந்திய அணியை ஸ்டார்க் ஒட்டுமொத்தமாக சுருட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் தமது முதல் போட்டியை உலகக் கோப்பையில் வருகின்ற அக்டோபர் எட்டாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கின்றன என்பதும் இதில் மிக முக்கியமான விஷயம்!