வீடியோ; லபுசேனை வம்புக்கிழுத்த சிராஜ் ; இரண்டாவது முறையில் தூக்கி ஜடேஜா!

0
165
Siraj

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து வரும் நான்கு போட்டியில் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மூன்றாவது போட்டி இன்று இந்தூர் மைதானத்தில் துவங்கியது!

நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் வென்று பலமான முன்னிலையைப் பெற்றிருக்கும் இந்திய அணி இந்த போட்டிக்கான டாஸில் வென்று முதலில் பேட்டிங் செய்வது என்று தீர்மானித்தது. இந்த போட்டியில் இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு பதிலாக கில் சேர்க்கப்பட்டிருந்தார்.

- Advertisement -

சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்வது சாதகமான பலனை தரும் என்பதால் இந்திய அணி நிர்வாகமும் இந்திய ரசிகர்களும் நம்பிக்கையாக இருந்தார்கள். ஆனால் அவர்களது நம்பிக்கையை உடைக்கும் படியாக இந்திய அணி 109 ரன்களில் சுருண்டது. ஆடுகளத்தில் பந்துகள் தாறுமாறாக திரும்பியதோடு திடீரென்று எகிறியும் தாழ்வாகவும் சென்றன.

இதனால் இந்திய அணி மற்றும் இந்திய அணி ரசிகர்கள் எப்படியும் ஆஸ்திரேலியா அணியும் எளிதில் சுருட்டி விடலாம் என்று நினைத்திருந்தனர். அதற்கு தகுந்தபடியே ஆஸ்திரேலியா 12 ரன்கள் இருந்த பொழுது டிராவிஸ் ஹெட் ஜடேஜாவால் எல் பி டபிள்யூ செய்யப்பட்டு வெளியேறினார்.

இதற்குப் பிறகு வந்த லபுசேனை ரன்கள் எதுவும் எடுக்கும் முன்பே இன்சைட் எட்ஜ் மூலம் ரவீந்திர ஜடேஜா போல்ட் செய்தார். ஆனால் அந்தப் பந்து நோ பாலாக இருந்ததால் அதற்கு இந்திய அணி பெரிய விலை கொடுக்க வேண்டியதாக போய்விட்டது.

- Advertisement -

உஸ்மான் கவஜா உடன் சேர்ந்த லபுசேன் அதற்கடுத்து இரண்டு முறை அதிர்ஷ்டத்தில் தப்பி பிழைத்து 31 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இரண்டாவது விக்கட்டுக்கு பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் இந்த ஜோடி 96 ரன்கள் சேர்த்தது. நாள் முடிவில் 156 ரன்களுக்கு நான்கு விக்கெட் இழந்து 47 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி தற்பொழுது இருக்கிறது.

போட்டி நேரத்தின் போது ஜடேஜா தனது 35 வது ஓவரின் மூன்றாவது பந்தை ஸ்லைடராக உள்நோக்கி வீச, முன்பு வீசப்பட்ட பந்துகள் போல் பந்து திரும்பும் என்று நினைத்த லபுசேன் ஏமாற கிளீன் போல்ட் ஆனார். அதற்கு முன்பு இவரை வைத்து ரவீந்திர ஜடேஜா நான்கு ஓவர்களில் ரன்கள் இல்லாமல் வீசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு நடுவே சுழற் பந்துவீச்சிக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் நான்கு பந்துவீச்சாளர்கள் வீசி முடித்து கடைசியாக சிராஜ் அழைக்கப்பட்டார். ஆடுகளம் ஒத்துழைக்காவிட்டாலும் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை ரன்கள் எடுக்க விடாமல் கட்டுக் கோப்பாக வீசினார்.

சிராஜ் உள்நோக்கி வீசிய ஒரு சிறப்பான பந்து லபுசேனுக்கு இன்சைட் எட்ஜ் எடுத்து பின்னால் போக, களத்தில் அவருடன் சிராஜ் நேருக்கு நேராக மோத சூடு கிளம்பியது. பின்பு விளையாட சென்ற லபுசேன் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இரண்டு நிகழ்வுகளுக்குமான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!