“கங்குலி எங்ககிட்ட மைண்ட் கேம் ஆட பாக்கறாரு” – முன்னாள் பாகிஸ்தான் வீரர் அதிரடி!

0
315
Ganguly

இந்தியாவில் முதல்முறையாக முழுமையாக ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதத்தில் நடக்க இருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை கடந்த வாரத்தில் வெளியிடப்பட்டது.

இந்த முறை அட்டவணை தாமதமாகவே வெளியிடப்பட்டது. காரணம் முன்மாதிரியாக வெளியிடப்பட்ட அட்டவணையில் பாகிஸ்தான் அணிக்காக ஒதுக்கப்பட்டு இருந்த ஆட்டங்கள் இடங்கள் மற்றும் எதிரணிகள் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையான அதிருப்தியை தெரிவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக பிசிசிஐ மற்றும் ஐசிசி இரண்டும் ஆலோசித்து இறுதியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஏற்காமல், மீண்டும் அறிவித்தபடியே ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான அட்டவணையை வெளியிட்டது.

இதில் இந்திய அணி தனது மூன்றாவது ஆட்டத்தில் அக்டோபர் 15ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் இந்தியா வந்து இந்தியாவுடன் விளையாடுவது ரசிகர்களிடையே அதிகபட்ச எதிர்பார்ப்பைக் கிளப்பி உள்ளது.

இந்தப் போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி முன்பு கூறுகையில் ” இந்த உலக கோப்பையில் பாகிஸ்தான் இந்தியா விளையாடும் போட்டியை விட ஆஸ்திரேலியா இந்தியா விளையாடும் போட்டிதான் பரபரப்பாக இருக்கும். காரணம் போட்டியின் தரம். ஏனென்றால் இதற்கு முன்பு உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானை இந்தியா ஒரு தலைப்பட்சமாகவே வென்றிருக்கிறது!” என்று கூறியிருந்தார்.

- Advertisement -

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி ” இந்தியா பாகிஸ்தான் போட்டி இந்தியாவுக்கு சாதகமாக இருக்கிறது என்று கங்குலி கூறுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அவருடைய அந்தக் கருத்தை படித்த பொழுது நான் அதிர்ச்சி அடைந்தேன். கங்குலி உயர்தர கிரிக்கெட்டில் விளையாடி பல வீரர்களை உருவாக்கிய சிறந்த கேப்டன்.

இதற்கு முன் ஐசிசி உலகக் கோப்பைகளில் நீங்கள் எங்களை பலமுறை தோற்கடித்திருக்கிறீர்கள். ஆனால் 2017 க்கு பிறகு நிலைமைகள் அப்படி கிடையாது. கடந்த ஆண்டு ஆசிய கோப்பையில் ஒரு வெற்றி ஒரு தோல்வி என்று முடிந்தது. டி20 உலகக் கோப்பையில் கூட விராட் கோலி தான் தனி ஆளாக நின்று வென்று கொடுத்தார்.

இந்தியா பாகிஸ்தான் போட்டியை விட இந்தியா ஆஸ்திரேலியா போட்டி கூட்டத்தை மைதானத்திற்கு அதிகம் இழுக்கும் என்று கங்குலி கூறுகிறார். அவரிடம் நான் கூறுகிறேன் ‘ உங்கள் நாட்டில் இரண்டில் எந்த போட்டி நடக்கும் பொழுது சாலைகள் காலியாக இருக்கும்?’ இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இரு நாடுகளிலும் டிவி திரைக்கு முன்னால் உட்கார்ந்து பிராத்தனை செய்வார்கள். இந்தியா பாகிஸ்தான் போட்டிகளின் செலவில் அருகில் கூட ஆஸ்திரேலியா இந்தியா விளையாடும் போட்டி கிடையாது. தாதாஜி எங்களிடம் மைன்ட் கேம் விளையாடுகிறார் என்று நான் உணர்கிறேன்!” என்று அவர் கூறியிருக்கிறார்!