“இந்திய கிரிக்கெட் அடுத்த சூப்பர் ஸ்டார் சுப்மன் கில் கிடையாது இவர்தான்” – வெங்கடேஷ் ஐயர் ஆச்சரியமான கருத்து!

0
1077
Gill

மகேந்திர சிங் தோனி 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிறகு சச்சின் சேவாக் கம்பீர் ஜாகிர் கான் ஹர்பஜன் சிங் என்று ஒவ்வொரு மூத்த வீரர்கள் ஆக வெளியேற வேண்டிய நிலை இருந்தது.

இதற்குப் பிறகு விராட் கோலியின் பேட்டிங் தலைமையில் புதிய வீரர்களின் வருகையோடு புதிய இந்திய அணி மகேந்திர சிங் தோனியின் தலைமையில் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கப்பட்டது. தற்பொழுது இந்திய அணியின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் சீனியர் வீரர்களான கேஎல்.ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி, ரகானே, புஜாரா போன்றவர்கள் நகர ஹர்திக் பாண்டியா தலைமையில் கொஞ்சம் கொஞ்சமாக இந்திய புது அணி உருவாக வேண்டிய நிலைமை இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் அடுத்த பேட்டிங் சூப்பர் ஸ்டார் ஆக வரக்கூடியவராக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இளம் வலது கை பேட்ஸ்மேன் சுப்மன் கில் எதிர்பார்க்கப்படுகிறார். இந்த ஆண்டில் அவர் கிரிக்கெட்டின் எல்லா வடிவத்திலும் அபாரமான சதங்களை அடித்துக் குவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்திய அணிக்காக இரண்டு ஒருநாள் மட்டும் ஒன்பது டி20 போட்டிகள் விளையாடிய மிதவேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் இதுகுறித்து கூறும்பொழுது ஒரு மாறுபட்ட கருத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

வெங்கடேஷ் ஐயர் பேசும் பொழுது
“கே கே ஆர் அணியில் ரிங்கு சிங் வேடிக்கையான மற்றும் விரும்பக்கூடிய ஒரு நபராக இருப்பவர். அவர் மிகவும் திறமையானவர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். நான் அவருடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேன். நிச்சயமாக அவர்தான் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார்.

ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு, அற்புதமான முறையில் ஆங்கர் ரோல் செய்வதற்கு தன்னால் முடியும் என்று அவர் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டிக் கொண்டே இருந்தார். அவர் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த பெரிய விஷயமாக இருக்கப் போகிறார்!” என்று கூறியிருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரிங்கு சிங் சில ஆட்டங்களை யாரும் நம்ப முடியாத அளவில் வெற்றிகரமாக கொல்கத்தா அணிக்கு முடித்துக் கொடுத்தார். மேலும் 474 ரன்கள் இந்த தொடரில் மிடில் வரிசையில் கீழ் வந்து அடித்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இறுதியாக நடக்க இருக்கும் டி20 தொடரில் இந்த முறை இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது!