வீடியோ.. ரிஸ்வான் விசித்திர ரன் அவுட்.. கடுப்பான பாபர்.. அஸ்வின் கொடுத்த விளக்கம்.!

0
2244

16-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரில் இன்று கோலாகலமாக தொடங்கியது இதன் துவக்க போட்டியில் பாகிஸ்தான் அணி நேபால் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.

அரசியல் காரணங்களுக்காக இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்ததால் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் வைத்து நடத்துவது என முடிவு செய்யப்பட்டு இந்த தொடரானது இன்று துவங்கியது. நேபால் அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் தேர்வு செய்தார்.

- Advertisement -

இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்கும் என்பதாலும் மேலும் இரண்டாவது பாதியில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஸ்விங் கிடைக்கும் மற்றும் ஆடுகளம் மெதுவாக திரும்பும் என்பதால் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் பக்கர் ஜமான் 14 ரன்களில் கரன் வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் தொடரில் சிறப்பாக விளையாடிய இமாம் உல் ஹக் ஐந்து ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டம் இழக்க பாகிஸ்தான் அணி துவக்கத்தில் தடுமாறியது.

இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரங்களான முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகிய இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். மேலும் அவ்வப்போது பவுண்டரிகள் எடுத்து அணியின் ஸ்கோர் உயரவும் உதவினர். இதனால் ஆரம்பத்தில் 25 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பாகிஸ்தான் அணி சரிவிலிருந்து மீண்டு வந்தது .

இந்நிலையில் அணியின் ஸ்கோர் 111 ஆக இருந்தபோது 44 ரன்கள் ஆடிக்கொண்டிருந்த ரிஸ்வான் விசித்திரமான முறையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். விரைவாக ஒரு ரன் எடுக்க முயன்ற போது நேபால் வீரர் திபேந்திர சிங் ஏறிந்த பந்து நேராக நான்ஸ்டிக்கர் முனையில் இருந்த விக்கெட்டுகளை வீழ்த்தியதால் ரிஸ்வான் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இவர் 50 பந்துகளில் ஆறு பவுண்டர்களுடன் 44 ரன்கள் எடுத்திருந்தார். இவரும் பாபர் அசாமும் சேர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடியாக 86 ரன்கள் சேர்த்திருந்தனர்.

- Advertisement -

களத்தடுப்பு வீரரிடம் இருந்து வந்த ஏறிந்த பந்து ஸ்டம்பை நோக்கி வரும்போது அது தன் மேல் படாமல் இருப்பதற்காக கிரேசி ஸ்கூல் பேட்டை வைக்காமல் துள்ளி குதித்தார் ரிஸ்வான். அப்போது பந்து ஸ்டெம்பில் பட்டது. கிரீஸ்க்கு வெளியே ரிஸ்வான் இருந்ததால் ரன் அவுட் ஆகி வெளியேறினார் . இதனால் கோபமடைந்த பாபர் அசாம் தனது தொப்பியை தூக்கி வீசி மைதானத்திலேயே தனது கோபத்தை வெளிப்படுத்தினார் .

மேலும் இது குறித்து ட்விட்டர் சமூக வலைதளத்தில் தனது கருத்தை பதிவு செய்திருக்கும் இந்திய வீரர் அஸ்வின் ” ஃபீல்டர் ஏறிந்த பந்து வந்த உயரம் அதிலிருந்து ரிஸ்வான் தன்னை காத்துக் கொள்வதற்கு சிரமமாக இருந்ததால் அவர் அவுட் ஆகி இருக்கக்கூடும். எனினும் ஒவ்வொரு முறையும் ரன் அவுட் இல் இருந்து தப்பிப்பதற்காக டைவிங் செய்யும் ரிஸ்வான் இந்த முறை அதை செய்யாமல் இருந்தது விசித்திரமாக இருக்கிறது. ஒருவேளை அவர் ஹெல்மெட் அணியாததால் டைவிங் செய்யாமல் இருந்திருக்கலாம். ஸ்பின்னர்களுக்கு எதிராக எப்போதும் ஸ்வீப் ஷார்ட் ஆடும் ரிஸ்வான் ஹெல்மெட் அணியாமல் ஆடியதும் வினோதமாக இருக்கிறது” என தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். முல்தான் நகரில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக ஹெல்மெட் அணியாமல் தொப்பி அணிந்து ஆடி இருக்கலாம். அவரது ரன் அவுட் ஆன வீடியோ இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.