வீடியோ.. இஷானை கோபமாக வெளியே அனுப்பிய ரவுப்.. பாண்டியா பதிலடி.. இந்தியா பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டியில் ருசிகர மோதல்!

0
4992
Hardik

நடப்பு ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய பாகிஸ்தான் அணிகள் இலங்கை கண்டி பல்லகலே மைதானத்தில் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன!

இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். ரோகித் சர்மா 11 ரன்கள், சுப்மன் கில் 10 ரன்கள், விராட் கோலி 4 ரன்கள், ஸ்ரேயாஸ் அய்யர் 14 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் மற்றும் இந்திய அணியின் துணை கேப்டன் ஹரிதிக் பாண்டியா இருவரும் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டார்கள்.

ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடிய இவர்கள் போகப்போக மெதுவாக அதிரடியில் ஈடுபட்டு இருவரும் அரை சதத்தை பூர்த்தி செய்தார்கள். இஷான் கிஷானுக்கு இது ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியான நான்காவது அரைசதமாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து விக்கெட் வீழ்த்தும் முயற்சியில் கேப்டன் பாபர் ஆஸம் ஹாரிஸ் ரவுப்பை கொண்டுவர, அதற்கு கை மேல் பலன் கிடைத்தது. சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த இஷான் கிஷான் 81 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இஷான் கிஷான் விக்கெட்டை வீழ்த்திய வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஹாரிஸ் ரவுப் அவரை களத்தை விட்டு வெளியேறுமாறு சைகையிலும் வார்த்தையிலும் கூறி ஆக்ரோஷமாக கொண்டாடினார்.

இதற்கு அடுத்து திரும்பவும் பந்து வீச வந்த ஹாரிஸ் ரவுப் ஓவரில் ஹர்திக் பாண்டியா மூன்று பவுண்டரிகளை ஓடவிட்டு அசத்தினார். இஷான் கிஷானுக்கு செய்ததற்கு இது பதிலடி போல் இருந்தது. சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 90 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உடன் 87 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து ரவீந்திர ஜடேஜா 14, சர்துல் தாக்கூர் 3, குல்தீப் யாதவ் 4, ஜஸ்ட்ப்ரீத் பும்ரா 16, முகமது சிராஜ் 1* என ரன்கள் எடுக்க இந்திய அணி 48.5 ஓவரில் 266 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் ஷா அப்ரிடி நான்கு விக்கெட் வீழ்த்தினார். ஹாரிஸ் ரவுப் மற்றும் நஷிம் ஷா தலா மூன்று விக்கெட் வீழ்த்தினார்கள்.