வீடியோ.. ஒரிஜினல் பேபி மலிங்கா.. துல்லியம் தவறாத யார்க்கர்ஸ்.. மும்பை இந்தியன்ஸ்க்கு ஐபிஎல்-ல் அடித்த லக்

0
279
Thushara

தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில் இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெறும் ஐபிஎல் டி20 லீக்கை போல, சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக் என்ற பெயரில் பிரான்சிஸைஸ் டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இடம் பெற்றுள்ள ஆறு அணிகளையும், ஐபிஎல் தொடரில் அணிகளை வாங்கியுள்ள ஆறு அணி நிர்வாகங்கள் வாங்கி இருக்கின்றன. இன்று ஒரு போட்டியில் பியர்ல் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் இரண்டு அணிகளும் மோதிக்கொண்டன.

- Advertisement -

இந்த போட்டியில் கீரன் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் முதலில் டாசில் வெற்றி பெற்று பந்து வீச முடிவு செய்தது. டேவிட் மில்லர் தலைமையிலான பியர்ல் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது.

அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய் 46 பந்தில் 68 ரன், ஜோஸ்பட்லர் 42 பந்தில் 54 ரன் என எடுத்தார்கள். 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு அந்த அணி 162 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணி 18.2 ஓவரில் 103 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியின் ஏழு வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள். 59 ரன்கள் வித்தியாசத்தில் பியர்ல் ராயல்ஸ் வெற்றி பெற்றது.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் இந்த முறை நடைபெற்று முடிந்த மினி ஏலத்தில் இலங்கை அணியின் குட்டி மலிங்கா நுவன் துசாராவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியிருந்தது.

மேலும் இவர் மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணியிலும் வாங்கப்பட்டு இருந்தார். இன்று அந்த அணியில் அவருக்கு விளையாடுவதற்கு முதல் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

அவர் இன்று நான்கு ஓவர்கள் பந்து வீசி 27 ரன்கள் மட்டும் விட்டுத்தந்து ஜோஸ் பட்லர் மற்றும் பேபயன் ஆலன் இருவரது விக்கெட்டையும் போல்ட் மற்றும் எல்பிடபிள்யு மூலம் மலிங்கா போல கடைசிக்கட்ட ஓவர்களில் கைப்பற்றினார். இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிய துருப்புச் சீட்டாக விளங்குவார் என்று தெரிகிறது.

மேலும் தற்போதைய மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணியில் மலிங்கா பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கிறார். மேலும் இவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.