வீடியோ.. மன்கட் ரன் அவுட்.. ஆனால் நடந்தது வேற.. களத்தில் பரபரப்பான சம்பவம்!

0
650
Sodhi

நியூசிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கு முன்பாக இங்கிலாந்தில் நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஒன்றுக்கு மூன்று என இழந்தது.

இந்த நிலையில் உலகக் கோப்பைக்கு தயார்படுத்திக் கொள்ளும் விதமாக இந்திய சூழ்நிலைக்குப் பழக, பக்கத்தில் இருக்கும் பங்களாதேஷ்க்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அந்த அணிக்கு எதிராக விளையாடுகிறது.

- Advertisement -

இந்த தொடரின் முதல் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில் தொடரின் இரண்டாவது போட்டி இன்று தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த
நியூசிலாந்து அணிக்கு டாம் ப்லுன்ட்டல் 68, ஹென்றி நிக்கோலஸ் 49 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்கள். மேல் வரிசையில் இருந்து பெரிதாக ரன்கள் எதுவும் வரவில்லை.

இந்த நிலையில் கீழ் வரிசை வீரர்கள் அணிய 200 ரன்களைத் தாண்டி எடுத்துச் செல்வதற்கு, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். நியூசிலாந்து காணியின் சுழற் பந்துவீச்சாளர் இஷ் சோதி அணியை கௌரவமான நிலைக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்தார்.

- Advertisement -

இந்த நிலையில் நியூசிலாந்து அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்திருந்த பொழுது சோதி பந்துவீச்சாளர் முனையில் ஹசன் முகமத்தால் ரன் அவுட் செய்யப்பட்டார். சோதி வெளியேறினார்.

இதற்கு அடுத்து உடனே நடுவரிடம் சென்ற பங்களாதேஷ் அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் சோதியை மீண்டும் விளையாட வருமாறு அழைக்க கேட்டுக் கொண்டார். அந்த ரன் அவுட்டை அவர் ஏற்கவில்லை.

இதற்கு அடுத்து களம் திரும்பிய சோதி பங்களாதேஷ் கேப்டனையும் அணியையும் பாராட்டி கைதட்டி உள்ளே வந்தார். மேலும் அவர் தன்னை ரன் அவுட் செய்த பந்துவீச்சாளரை அணைத்து நன்றியை தெரிவித்தார்.

ஐசிசி இந்த வகையான ரன் அவுட்டை தவறான ஒன்று கிடையாது என்று கூறிய பிறகும், சில அணியும், சில வீரர்களும் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். அதே சமயத்தில் இந்திய அணியின் வீரர் அஸ்வின் இந்த விஷயத்தை வரவேற்கிறார். உலகக் கோப்பை மாதிரியான பெரிய தொடர்களில் இப்படியான ரன் அவுட்டை என்ன செய்வார்கள்? என்று பார்க்க வேண்டும்!