வீடியோ.. கோலி களத்தில் செய்த செயல்.. நெகிழ்ந்து போன மொத்த தென் ஆப்பிரிக்கா.. குவியும் பாராட்டுகள்!

0
999
Virat

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் இறுதித் தொடர்பான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அவருக்கு கேட்டவுனில் தற்பொழுது நடைபெற்று வரும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இறுதியானதாக அமைகிறது.

- Advertisement -

இந்த நிலையில் டாஸ் வென்ற கேப்டன் டீன் எல்கர் தமது அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்து துவக்க ஆட்டக்காரராக உள்ளே வந்தார். முதல் இன்னிங்ஸில் நான்கு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தென் ஆப்பிரிக்க அணி ஒட்டு மொத்தமாக 55 ரன்களில் சுருண்டது.

இதற்கு அடுத்து விளையாடிய இந்தியாவும் 153 ரன்கள் மட்டுமே எடுத்து, கடைசி ஆறு விக்கெட்டுகளை ரன் ஏதும் எடுக்காமல் இழந்து அதிர்ச்சி அளித்தது. போட்டி நடைபெறும் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு எந்த ஒரு சாதகத்தையும் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் முதல் நாளிலேயே தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி 62 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட்களை இழந்திருக்கிறது. இன்றைய ஆட்டம் எந்த பக்கம் செல்லும் என்பது சுவாரசியமான ஒன்றாக அமைகிறது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய பொழுது டீன் எல்கர் முகேஷ் குமார் பந்துவீச்சில் விராட் கோலி இடம் கேட்ச் கொடுத்து 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அவருடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் பேட்டிங் அத்தோடு முடிவுக்கு வந்தது.

இப்படியான நிலையில் கேட்ச் பிடித்த விராட் கோலி அதை பெரிய அளவில் கொண்டாடாமல், டீன் எல்கருக்கு மரியாதை செய்து வழி அனுப்பி வைக்குமாறு, இந்திய அணி வீரர்களிடமும் மற்றும் மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்களிடமும் கேட்டுக் கொண்டார்.

மேலும் தாமே ஓடிச்சென்று எல்கரை கட்டியணைத்து தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பெரும்பாலும் களத்தில் ஆக்ரோஷமாக இருக்கும் விராட் கோலி, முக்கியமான நேரங்களில் மிகுந்த பெருந்தன்மையோடு எப்பொழுதும் நடந்து கொள்வார். பலரிடம் அவர் இதை வெளிப்படுத்தியும் இருக்கிறார்.

ஆனால் நேற்று டீன் எல்கருக்கு விராட் கோலி மரியாதை செய்த விதம், மைதானத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க ரசிகர்களை மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் ரசிகர்களையும் நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. தற்பொழுது விராட் கோலியின் செயல் பலராலும் வலைதளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது!