வீடியோ 6,6,6.. “அடுத்த அஸ்வின் நீதானா?”.. சோயப் பஷீரை சொல்லி அடித்த ஜெய்ஸ்வால்.. மீண்டும் சம்பவம்

0
1037
Jaiswal

மார்ச்-7. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலிமையான முன்னிலையில் இருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஜாக் கிரவுலி மட்டும் தாக்குப் பிடித்து 79 ரன்கள் எடுத்தார். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் நிலைத்து நின்று விளையாடாத காரணத்தினால், இங்கிலாந்து அணி 218 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

இந்திய அணியின் தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும், இந்திய அணியின் தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் நான்கு விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து இந்திய அணிக்கு துவக்கம் தர வந்த ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் இணைந்து அரை சதம் பார்ட்னர்ஷிப் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறார்கள்.

இங்கிலாந்து பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஏழு ஓவர்கள் மட்டுமே வீசினார்கள். இதற்கு அடுத்து இங்கிலாந்து கேப்டன் உடனடியாக சுழற் பந்துவீச்சாளர்களை வந்து வீச்சிற்கு கொண்டு வந்தார்.

- Advertisement -

ரோகித் சர்மா முதலில் வேகப் பந்துவீச்சாளர்களை குறி வைத்து ரன்கள் எடுக்க, ஜெய்ஸ்வால் மிகவும் பொறுமையாக விளையாடினார். சுழற் பந்துவீச்சாளர்கள் வந்ததும் தாக்கி விளையாடும் திட்டம் அவரிடம் இருந்தது.

இதேபோல் சோயப் பஷீர் வந்ததும் அவருடைய ஓவரின் மூன்றாவது பந்தில் முதல் சிக்சரை அடித்த ஜெய்ஸ்வால், இதற்கு அடுத்து ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்தில் மேற்கொண்டு இரண்டு சிக்ஸர்கள் அடித்து, அவருடைய ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்கள் கொண்டு வந்தார். இதே தொடரில் இதற்கு முன்பு ஜேம்ஸ் ஆண்டர்சனை இப்படி அடித்திருந்தார்.

மேலும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் சோயப் பஷிரை அடுத்த அஸ்வின் என்றும், எனவே அப்படிப்பட்ட ஒரு வீரர் இங்கிலாந்து அணிக்கு கிடைத்திருப்பதால், அந்த வாரத்தை இங்கிலாந்து கொண்டாட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : “218-10.. அஸ்வின் பைய்யா நீங்க போங்க.. இல்ல நீதான் போகனும்”.. நெகிழ வைத்த குல்தீப் அஸ்வின்.. சுருண்ட இங்கிலாந்து

இந்த நிலையில் சோயப் பஷீரை நீதான் அடுத்த அஸ்வினா? என்று கேட்டு அடித்தது போல ஜெய்ஸ்வால் மிகச் சாதாரணமாக அடித்து நொறுக்கினார். இந்தத் தொடரில் தொடர்ந்து அவரது சிக்ஸர் மழை பொழிந்து வருகிறது.