வீடியோ.. “பேட்ல பட்டுச்சுங்க.. ஏற்கனவே நான் ரெண்டு டக்” – ரோகித் சர்மா அம்பயரிடம் சுவாரசிய பேச்சு

0
481
Rohit

இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே மூன்றாவது டி20 போட்டி தற்பொழுது பெங்களூரில் அமைந்துள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த போட்டி நடைபெறும் குறிப்பிட்ட ஆடுகளம் இரட்டை வேகம் கொண்டதாக இருக்கிறது. இதனால் பந்து சரியாக எந்த வேகத்தில் வருகிறது என்று பேட்ஸ்மேன்களுக்கு கணிக்க மிக கஷ்டமாக இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் கடந்த இரண்டு போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்த ரோகித் சர்மா, தொடரை கைப்பற்றி விட்ட நிலையில் ஓய்வு எடுக்காமல் மூன்றாவது போட்டியில் கேப்டன் மற்றும் துவக்க வீரராக இந்திய அணிக்கு விளையாட களம் வந்தார்.

முதல் ஓவரின் முதல் பந்தை சந்தித்த ஜெய்ஸ்வால் மூன்று ரன்கள் எடுக்க இரண்டாவது பந்துக்கு ரோகித் சர்மா வந்தார். அவர் சந்தித்த முதல் பந்தை பின்னால் தட்ட பந்து பவுண்டரிக்கு சென்றது.

14 மாதங்கள் கழித்து டி20 கிரிக்கெட் க்கு திரும்ப வந்த ரோகித் சர்மாவுக்கு முதல் டி20 ரன்கள் கிடைத்துவிட்டது என்று கிரிக்கெட் வர்ணனையிலிருந்து எல்லோரும் மகிழ்ச்சியாக கூற, நடுவர் மட்டும் இடுப்பில் பட்டு சென்றதாக லெக் பைஸ் கொடுத்தார்.

- Advertisement -

இதற்கடுத்து இன்னொரு பந்தை அதே போல் பின்புறம் திரும்பி அடிக்க அது உடலில் பட்டு பவுண்டரி சென்றது. இதன் காரணமாக முதல் ஓவர் முழுக்க ரோகித் சர்மா ரன் ஏதும் இல்லாமல் களத்தில் நின்று இருந்தார்.

இந்த நிலையில் முதல் ஓவர் முடிவின்போது ரோகித் சர்மா களத்தில் இருந்த நடுவரிடம் நகைச்சுவையாக “நீங்கள் அதற்கு லெக் பைஸ் கொடுக்கிறீர்களா? பந்து என்னுடைய பேட்டில் பட்டது. என் பெயரில் ஏற்கனவே இரண்டு பூஜ்ஜியங்கள் இருக்கிறது” என்று குறிப்பிட்டார். இதை திரும்ப ஒளிபரப்பில் பார்த்த வர்ணனையாளர்கள் சிரிப்பை அடக்க முடியாத நிலைக்கு சென்று விட்டார்கள்.

இந்த ஆடுகளத்தை உணர்ந்து அதற்கு ஏற்றபடி விளையாடாத காரணத்தினால் இந்திய அணி தற்பொழுது ரோகித் சர்மாவை தவிர ஜெய்ஸ்வால், விராட் கோலி, சஞ்சு சாம்சன், சிவம் துபே என நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்து இருக்கிறது.