வீடியோ: ஸ்டம்பை அடித்து நொறுக்கிய இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் .. நடுவரின் தவறான தீர்ப்பால் ஆவேசம்.!

0
4696

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் ஆரம்பமானது. இதன் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி டக்வோர்த் லிவிஸ் முறையில் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

- Advertisement -

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பர்கானா ஹக் சிறப்பாக விளையாடி 107 ரன்களை எடுத்தார். இதனைத் தொடர்ந்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 49.3 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் பரபரப்பான இந்த போட்டி வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிவடைந்தது . மேலும் ஒரு நாள் போட்டி தொடரையும் இரண்டு அணிகளும் 1-1 என்ற கணக்கில் பகிர்ந்து கொண்டன. மேலும் இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டம் இழந்த விதம் கடும் சர்ச்சையை எழுப்பி இருக்கிறது.

அணியின் ஸ்கோர் 160 ஆக இருந்தபோது பங்களாதேஷ் அணியின் நகிதா அக்தர் வீசிய 33 வது ஓவரின் 4-வது பந்தில் நடுவரால் எல்பிடபிள்யூ என தீர்ப்பு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் ஹர்மன்பிரீத் கவுர்.

- Advertisement -

அம்பையர் அவுட் கொடுத்த போது களத்திலேயே அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு ஸ்டம்பிலும் பேட்டால் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடுவரிடமும் அவருக்கு எதிராக கொடுக்கப்பட்ட தீர்ப்புக்கு வாதாடினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹர்மன்பிரீத் கவுர் பந்தை ஸ்வீப் செய்ய முயன்ற போது பந்து தாலுக்கா பில் பட்டதால் நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால் பந்து கால்காபில் படுவதற்கு முன்பாக அவரது பேட்டில் பட்டது. இதற்கு தனது மட்டையை தூக்கி அம்பயரிடம் சைகையும் காட்டினார். ஆனாலும் நடுவர் அவுட் கொடுத்ததால் ஏமாற்றமடைந்த கவுர் அம்பையர் இடமும் ஆடுகளத்திலும் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

மேலும் போட்டி முடிந்ததற்கு பின் பேசிய ஹர்மன்பிரீத் கவுர் ” இந்தப் போட்டியில் இருந்து நிறைய பாடங்களை கற்றுக் கொண்டோம் என தெரிவித்தார். மேலும் பங்களாதேஷிற்கு கிரிக்கெட் விளையாட வரும் போது கிரிக்கெட் விளையாடுவதுடன் சேர்த்து இது போன்ற மோசமான அம்பையரிங் சவால்களையும் சந்திக்க வேண்டி இருக்கிறது. அடுத்த முறை இங்கு விளையாட வரும்போது அதற்கும் தயாராகி வரவேண்டும்” என தெரிவித்திருக்கிறார், ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டம் இழக்க செய்யப்பட்ட வீடியோ இந்தப் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.