வீடியோ.. பிரம்மாண்ட சிக்ஸ்.. CPL-ல் அம்பதி ராயுடு அசத்தல் சாதனை.. ஐபிஎல்-ல் விட்ட இடத்திலேயே தொடரும் பாகுபலி!

0
363
CPL

சர்வதேச கிரிக்கெட்டில் டி20 கிரிக்கெட்டின் அறிமுகமும், இந்திய கிரிக்கெட் வாரியம் 16 ஆண்டுகளாக நடத்தி வரும் ஐபிஎல் டி20 லீக்கின் பிரம்மாண்டமான வெற்றியும், உலகின் பல கிரிக்கெட் வாரியங்களையும் தனிப்பட்ட டி20 கிரிக்கெட் லீக்குகளை நடத்த வைத்திருக்கிறது!

இந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் கரீபியன் பிரிமியர் லீக் என்ற பெயரில் 2013 ஆம் ஆண்டு தொடங்கி டி20 தொடர் நடத்தி வருகிறது. இதில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

- Advertisement -

நடந்து முடிந்த இந்த ஆண்டு ஐபிஎல் தொடரோடு ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் அம்பதி ராயுடு, அமெரிக்காவில் நடைபெற்ற மேஜர் லீப் கிரிக்கெட் தொடரின் முதல் சீசனில் விளையாடுவதாக இருந்து, பின்பு பிசிசிஐ பிரச்சனையால் விலகிக் கொண்டார்.

ஆனால் இதற்கு அடுத்து அவர் கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் செயின் கிட்ஸ் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு விளையாட ஒப்பந்தமானார்.

கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் ஒப்பந்தமான இரண்டாவது இந்தியர் என்ற சிறப்பை இவர் பெற்றார். இதற்கு முன்னால் பிரவீன் தாம்பே விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்கு எதிராக அம்பதிராய்டு இடம் பெற்றிருக்கும் செயின் கிட்ஸ் அணி விளையாடிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணி ஷாய் ஹோப் 32 பந்தில் 52 ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் சேர்த்தது.

இதற்கு அடுத்து கொஞ்சம் கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய செயின் கிட்ஸ் அணிக்கு எவின் லீவிஸ்
48(24) ரன்களை அம்பதி ராய்டு உடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக கொண்டு வர, அந்த அணிக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் இவர்கள் இருவரது விக்கெட் விழுந்ததும் அந்த அணி அப்படியே 132 ரன்களுக்கு சுருண்டு தோற்றது.

இந்த போட்டியில் பேட்டிங் செய்த அம்பதி ராயுடு 24 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 32 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் முதல் முதலில் சிக்ஸர் விளாசிய இந்தியர் என்ற சிறப்பை அம்பதி ராயுடு பெற்றார்.