வீடியோ; இன்று சக வீரர்களை கெட்ட வார்த்தையில் திட்டி ஸ்டெம்ப் மைக்கில் சிக்கிய ஹார்திக் பாண்டியா!

0
941
Hardik pandya

இந்தியா வந்துள்ள இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணி ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியிடம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 எனத் தோற்றார்கள்!

தற்பொழுது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறார்கள். இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணி 215 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி தரப்பில் அறிமுக வீரர் நுவனிது பெர்னாடோ 50 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் பத்து ஓவர்கள் பந்து வீசி 51 ரன்கள் விட்டுத்தந்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்!

இதைத்தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணியில் முன்னணி வீரர்கள் சொற்பரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். இதற்கு அடுத்து கே.எல் ராகுல் உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்து அரைசத பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டார்கள். தற்பொழுது ஹர்திக் பாண்டியா ஆட்டம் இழந்து இருக்கிறார் இந்திய அணி 35 ஓவருகளுக்கு 165 ரன்கள் 5 விக்கெட் இழப்பிற்கு எடுத்துள்ளது.

இந்த ஆட்டத்தில் இலங்கை அணி பேட் செய்யும் பொழுது ஹர்திக் பாண்டியா வந்து வீசிக்கொண்டு இருந்தார். அவர் வீசிய அந்த ஓவரின் முடிவின்போது அவர் டக் அவுட்டில் இருந்த சக அணி வீரர்களை பார்த்து ஹிந்தியில் பேசிய வார்த்தைகள் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. அவர் பேசியது ஸ்டெம்ப் மைக்கில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

- Advertisement -

ஹர்திக் பாண்டியா தான் வீசிய ஓவரை முடித்துவிட்டு தண்ணீர் கொண்டு வரும் சக அணி வீரர்களை பார்த்து ” நான் தண்ணீர் கேட்டு ஒரு ஓவருக்கு மேல் ஆகிவிட்டது. இப்பொழுது என் அந்த உறுப்பு வெந்து கொண்டு இருக்கிறது!” என்று பச்சையாக பேசியிருக்கிறார். ஏற்கனவே ஒரு முறை மைதானத்தில் சக அணி வீரரிடம் ஹர்திக் பாண்டியா ரோகித் சர்மாவை தவறான வார்த்தையில் பேசியது பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது!