வீடியோ: பாபர் அசாமின் ஒரு மாத மாஸ்டர் பிளான்.. முதல் ODI-யில் டக் அவுட்.. ஆசிய கோப்பைகாக பணத்தை உதறிய NO.1 வீரருக்கு வந்த சோதனை!

0
1059

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே பாகிஸ்தான் அணி இலங்கையை வந்தடைந்து ஆப்கானிஸ்தான் அணியுடன் மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடருக்கான முதல் போட்டி இன்று துவங்கியது.

வருகின்ற ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் வைத்து ஆசிய கோப்பை காண கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து 13-வது உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் வைத்து அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இதற்காக தயாராகும் வகையில் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது .

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஒரு நாள் கிரிக்கெட் ஃபார்மேட்டின் நம்பர் ஒன் வீரருமான பாபர் அசாம் இலங்கை அணி உடனான டெஸ்ட் தொடர் முடிவடைந்ததிலிருந்து இலங்கையில் தங்கி லங்கா பிரீமியர் லீக் போட்டிகளில் கொழும்பு ஸ்டிக்கர்ஸ் அணிக்காக விளையாடினார். அந்தத் தொடரில் ஒரு சதமும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசியக் கோப்பை மற்றும் உலக கோப்பை போட்டிகளுக்கு தயாராக கனடா நாட்டில் நடைபெற்ற குளோபல் டி20 போட்டியை நிராகரித்து இலங்கையில் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்றார்.

இலங்கையில் அதிகமான போட்டிகளை விளையாடுவதன் மூலம் அங்குள்ள ஆடுகளங்களின் தன்மை மற்றும் சீதோசன நிலைக்கு பழக்கப்பட்டு அதன் மூலம் உலககோப்பைக்கும் தயாராகும் வகையில் லங்கா பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்பதாக தெரிவித்திருந்தார். இலங்கையின் ஆடுகளங்கள் மற்றும் வெப்பநிலை இந்தியாவில் இருப்பதே போன்று இருக்கும் என்பதால் அங்கு தங்கி இருந்து உலக கோப்பைகான பயிற்சியாகவும் அதை எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று துவங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது . பாகிஸ்தான் அணிக்கே ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த அணியின் துவக்க வீரர் ஃபக்கர் ஜமான் 2 ரன்னில் ஃபரூக்கி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து ஆட வந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முஜிபுர் ரஹ்மான் பந்துவீச்சில் எல்பி டபிள்யூ முறையில் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

இவரைத் தொடர்ந்து ஆட வந்த முகமது ரிஸ்வான் 21 ரன்களில் முஜிபுர் ரஹ்மான் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். முகமது ரிஸ்வானை தொடர்ந்து அகா சல்மான் 7 ரன்களில் ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார் . இதனால் பாகிஸ்தான் அணி 23 ஓவர்களில் 86 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருக்கிறது. அந்த அணியின் துவக்க வீரரான இமாமுல் ஹக் 36 ரன்கள்டனும் இப்திகார் அகமத் 14 ரன்கள்டனும் களத்தில் உள்ளனர் .

பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் கடந்த சில வருடங்களாக ஒரு நாள் போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடி வந்தார். தற்போது அவர் ஒரு மாத காலத்திற்கும் மேலாக இலங்கையிலிருந்து பயிற்சி மேற்கொண்டு வருவதால் இந்த ஒரு நாள் போட்டி தொடரில் மிகச் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது . ஆனால் அவர் டக் அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறார். பாபர் அசாமியில் எல்பிடபிள்யூ ஆகும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவானது இந்த பதிவுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.