ஐபிஎல் மட்டும் போதாது.. விராட் கோலி பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் – ஷாஹித் அப்ரிடி பேட்டி

0
44
Virat

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. இதில் அந்த அணியின் விராட் கோலிக்கு பெரிய பங்கு இருக்கிறது. இந்த நிலையில் விராட் கோலியை பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் விளையாடுமாறு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி அழைத்திருக்கிறார்.

ஆர்சிபி அணி தங்களுடைய முதல் எட்டு ஆட்டங்களில் ஏழு ஆட்டங்களை தோற்றது. ஆனாலும் இந்த எல்லா போட்டிகளிலும் விராட் கோலி மனம் தளராமல் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார். அவர் தொடர்ந்து தன்னுடைய ஊக்கத்தை விடாமல், தன்னுடைய அணியினருக்கும் கொடுத்தார்.

- Advertisement -

இந்த நிலையில் ஆர்சிபி அணி சரியான பிளேயிங் லெவனை கண்டுபிடித்து, அதற்கு அடுத்து சிறப்பாக விளையாடி தொடர்ந்து ஆறு போட்டிகளை வென்று, ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. மேலும் ஐபிஎல் வரலாற்றில் இந்த சீசனில் ஆர்சிபி அணியின் செயல்பாடு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி 14 போட்டிகளில் விளையாடி 155 ஸ்ட்ரைக் ரேட் உடன் 66 ரன் ஆவரேஜில் 708 ரன்கள் குவித்திருக்கிறார். இந்த ஆண்டு அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பி விராட் கோலியிடம் தொடர்ந்து இருக்கப் போவது உறுதியான ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில் விராட் கோலி பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாடுவதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கூறும் பொழுது “விராட் கோலி மாதிரியான ஒரு வீரரின் அறிக்கை, அவர்கள் தங்கள் நாட்டின் தூதர்கள் என அறிவிக்கிறது. அவரிடம் இப்படிப்பட்ட ஒரு அறிக்கையை நான் எதிர்பார்த்தேன். மிக்க நன்றி விராட்! நீங்கள் பாகிஸ்தான் வந்து பிஎஸ்எல் தொடரில் விளையாட வேண்டும் இல்லை இந்திய அணி உடன் வந்து பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டும். நீங்கள் வருவதற்கு நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று கூறுகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : எல்லாம் கடவுளின் திட்டம்.. எதுவும் சொல்ல மாட்டேன்.. எங்களுக்கு முக்கியமான வேலை இருக்கு – விராட் கோலி பேட்டி

இதேபோல ரோஹித் சர்மா சில நாட்களுக்கு முன்பாக சிறப்பான பவுலிங் யூனிட் கொண்ட பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுவதுசிறப்பான ஒன்றாக இருக்கும், குறிப்பாக ஏதாவது பொதுவான இடத்தில் அவர்களுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது நன்றாக இருக்கும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.