எல்லாம் கடவுளின் திட்டம்.. எதுவும் சொல்ல மாட்டேன்.. எங்களுக்கு முக்கியமான வேலை இருக்கு – விராட் கோலி பேட்டி

0
16
Virat

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு மிகவும் குறைவு என்ற கருதப்பட்ட நிலையில், அந்த அணி அபாரமான முறையில் செயல்பட்டு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து விராட் கோலி முக்கிய கருத்து ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சிஎஸ்கே அணியிடம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணி தோல்வி அடைந்தது. அதற்கு அடுத்து தங்களது சொந்த மைதானத்திற்கு திரும்ப வந்து இரண்டாவது போட்டியில் பஞ்சாப் அணியை வென்றது.

- Advertisement -

இங்கிருந்து ஆர்சிபி அணி தொடர்ந்து ஆறு போட்டிகளை வரிசையாக தோற்றது. மொத்தம் எட்டு போட்டிகளில் ஏழு போட்டிகளை தோற்று விட்ட காரணத்தினால், ஆர்சிபி அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு முடிந்து விட்டது என எல்லோரும் நினைத்தார்கள். இவ்வளவு அதிகப்படியான போட்டிகளை குறுகிய நேரத்தில் தோற்கும் பொழுது, ஒரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது மிகவும் கடினமான விஷயம்.

ஆனால் ஆர்சிபி அணி அங்கிருந்து 6 போட்டிகளை வரிசையாக தோற்றது போலவே, 6 போட்டிகளை வெல்லவும் செய்தார்கள். அத்தோடு 14 புள்ளிகள் எடுத்து நல்ல ரன் ரேட்டை தக்க வைத்து, தற்பொழுது பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்று விட்டார்கள். இது ஐபிஎல் தொடரில் ஒரு ஆச்சரியமான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் விராட் கோலி கூறும் பொழுது “கடவுளிடம் ஒரு திட்டம் இருக்கிறது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் நேர்மையாக இருக்க வேண்டும். நாங்கள் எங்களுடைய கடின உழைப்பில் நேர்மையாக இருந்தோம் அதற்கான வெகுமதி எங்களுக்கு கிடைத்திருக்கிறது. இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் அடுத்தவற்றில் கவனம் செலுத்த வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஒரு காரணத்துக்காக ஆர்சிபி ஐபிஎல் கோப்பையை ஜெயிக்கனும்.. கோலி தோள்ல ஏறிதான் வராங்க – அம்பதி ராயுடு பேச்சு

ஆர்சிபி அணிக்கு புள்ளி பட்டியலில் நான்காவது இடம் உறுதி ஆகிவிட்டது. ஆனால் இரண்டாவது இடம் ராஜஸ்தானுக்கு அல்லது ஹைதராபாத்துக்கா? என்பது இன்னும் முடிவாகாமல் இருந்து வருகிறது. இன்று அதற்கான விடை தெரிந்து விடும். அதிலிருந்து ஆர்சிபி அணியுடன் யார் மோதுகிறார்கள்? என்பதும் தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.