சொல்லியும் கேட்காம எதுக்கு ஒளிபரப்புனிங்க ..எல்லை மீறி போறிங்க – தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ரோகித் சர்மா கண்டனம்

0
1107
Rohit

ஐபிஎல் தொடரில் கடந்த வாரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் ரோகித் சர்மா கொல்கத்தா அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் மைதானத்தில் பேசியதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்தது. இந்தச் சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இது குறித்து ரோகித் சர்மா தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருப்பது நாம் அறிந்ததே. இந்த நிலையில் அந்த அணி நிர்வாகத்துடன் ரோகித் சர்மாவுக்கு பிரச்சனை இருப்பதாக வெளியில் பலராலும் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

இப்படியான சூழ்நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது அந்த அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் தனது எதிர்காலம் குறித்து ரோகித் சர்மா இயல்பாக பேசிக் கொண்டிருந்தார். அதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் பதிவு செய்தது.

இதை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்படவும் செய்யப்பட்டது. பின்பு இது மிகவும் பர்சனலான விஷயம் என்பதால் நீக்கவும் செய்யப்பட்டது. அதற்குள் ரோகித் சர்மா பேசிய விஷயம் காட்டுத் தீ போல பரவி விட்டது. இதை ரோகித் சர்மா அப்பொழுதே எங்கும் ஒளிபரப்பு செய்யக்கூடாது எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்து ரோகித் சர்மா தனது கண்டன அறிக்கைகள் கூறும்பொழுது ” கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை இப்பொழுது மிகவும் ஊடுருவக் கூடிய ஒன்றாக மாறிவிட்டது. இப்பொழுது பயிற்சியின்போது அல்லது போட்டி நாட்களின்போது கிரிக்கெட் வீரர்களுக்கு மத்தியில் மற்றும் எங்கள் அணி ஊழியர்களுக்கு மத்தியில் நாங்கள் பேசுவது பதிவு செய்யப்பட்டு வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல் மட்டும் போதாது.. விராட் கோலி பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் – ஷாஹித் அப்ரிடி பேட்டி

எனது உரையாடலை பதிவு செய்ய வேண்டாம் என ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் கேட்டுக் கொண்ட போதும், அது அப்பொழுதும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது ஒருவரின் தனி உரிமையை மீறுவதாகும். பிரத்தியேகமான நிகழ்வுகளை பெறுவதற்கும், பார்வையாளர்களை அதிகரிப்பதற்கும் செய்யப்படும் இப்படியான வேலைகள், கிரிக்கெட் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை உடைப்பதாக அமையும்” என்று கூறி இருக்கிறார்.