ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பை தொடரில் இன்று ஆஸ்திரேலியா இலங்கை அணிகள் புதிய பெர்த் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி இருந்தது. ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியிடம் தனது முதல் ஆட்டத்தில் படுதோல்வியைச் சந்தித்து இருந்தது.
இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் போட்டி ஆஸ்திரேலிய அணிக்கு ஏறக்குறைய வாழ்வா சாவா போட்டி. இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
போட்டி நடக்கும் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு மிகவும் சாதகமாக இருந்ததால் இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்தில் மிகவும் திணறினார்கள். குசல் மெண்டிஸ் சீக்கிரத்தில் வெளியேற, அடுத்து நிசாங்கா மற்றும் தனஞ்சய டி சில்வா இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார்கள்.
பொறுப்பாக விளையாடி வந்த தனஞ்சய டி சில்வா அதிரடியாக விளையாட வேண்டிய நெருக்கடியில் சுழற்பந்துவீச்சாளர் ஆஷ்டன் அகர் பந்துவீச்சில் பந்தை நேராக மேலே தூக்கி அடிக்க பந்து காற்றில் பறந்தது. நேராக தூரமாக நின்ற டேவிட் வார்னர், அங்கிருந்து இருபத்தி ஒரு மீட்டர் தூரம் ஓடிச் சென்று, பந்தை ரிவர்ஸ் கப் முறையில் அபாரமாக பிடித்து அசத்தினார்.
மேலும் இதற்கு முன் நிசாங்கா அடித்த பந்தை மிக அருமையாக கேட்ச் செய்து, பந்து சிக்சருக்கு போகாமல் தடுத்து வெளியே வீசி அபாரமாக செயல்பட்டார். தற்போது 35 வயது ஆதி இருக்கும் டேவிட் வார்னர் இளம் வீரர்களை விட வேகமாகவும் அபாரமாகவும் பில்டிங் செய்கிறார்.
இன்றைய ஆஸ்திரேலிய இலங்கை அணி முதலில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 157 ரன்கள் எடுத்தது. தற்போது இதை விரட்டி ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது!