வீடியோ; முழுமையாக ரைட் ஹேண்டில் பேட்டிங் செய்யும் டேவிட் வார்னர்!

0
187
Warner

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இரண்டு அணிகளும் ஐபிஎல் 16வது சீசனின் 16வது போட்டியில் தற்போது மோதி வருகின்றன!

மும்பை அணியின் மூன்றாவது போட்டியான இன்று முதல் முறையாக டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆர்ச்சர் இல்லாத நிலையில் ரைலி மெரிடித் அணிக்குள் வந்தார். டெல்லி அணியில் முஸ்தஃபீஸூர் ரகுமான் மற்றும் இந்திய இளம் வீரர் யாஸ் துல் இருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

- Advertisement -

கடந்த ஆட்டங்களைப் போல் இல்லாமல் இந்த முறை வார்னர் மற்றும் ப்ரீத்வி ஷா இருவரும் ஓரளவுக்கு நல்ல துவக்கத்தையே தந்தார்கள். மூன்று பவுண்டரிகள் உடன் சிறப்பாக ஆரம்பித்த பிருத்வி ஷா ஹிர்த்திக் சோக்கின் பந்து வீச்சில் 10 பந்துகளுக்கு 15 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து டேவிட் வார்னர் உடன் மனிஷ் பாண்டே இரண்டாவது விக்கெட்டுக்கு இணைந்து கொண்டார். பவர் பிளேவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் என டெல்லி அணி நல்ல நிலையை அடைந்தது.

இந்த நிலையில் ஏழாவது ஓவருக்கு வந்த மும்பை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹிர்த்திக் சோக்கின் மூன்றாவது பந்தை நோ பாலாக வீச, அந்தப் பந்துக்கான ஃப்ரீ ஹிட்டை டேவிட் வார்னர் முழுக்க முழுக்க வலது கை பேட்ஸ்மேன் ஆக மாறி விளையாடினார். அப்படியே அவர் திரும்பி விளையாடியதற்கு ஒரு ரன் மட்டுமே கிடைத்தது.

- Advertisement -

வழக்கமாக டேவிட் வார்னர் ஸ்விட்ச் ஹிட் முறையில் பந்து வீசப்படும் நொடியில் இப்படி மாறுவது உண்டு. ஆனால் இன்று பந்து வீசப்படுவதற்கு முன்பே வலது கை பேட்ஸ்மேன் போல மாறி நின்று விளையாடியது, பார்ப்பதற்கு எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.