பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது . இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த திங்கள்கிழமை கொழும்புவில் தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது . இலங்கை அணியில் தனஞ்செயா டிசில்வா 57 ரன்களையும் தினேஷ் சந்திமால் 34 ரன்களையும் எடுத்தனர். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் அப்ரார் அகமத் 4 விக்கெட்டுகளையும் நசிம் ஷா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்
இதனைத் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 177 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த அணியின் அப்துல்லா ஷபிக் மற்றும் பாபர் அசாம் இருவரும் களத்தில் இருந்தனர். நேற்றைய இரண்டாவது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற மூன்றாவது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி மிகச் சிறப்பாக விளையாடி தற்போது வரை 476 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. அந்த அணியின் அப்துல்லா ஷபிக் அபாரமாக விளையாடி இரட்டை சதம் எடுத்தார்.
மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் எடுத்த சவூத் ஷகீல் 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தற்போது சல்மான் அகா 82 ரன்கள்டனும் முகமது ரிஸ்வான் 6 ரன்கள்டனும் விளையாடி வருகின்றனர். பாகிஸ்தான் அணி இதுவரை 311 ரன்கள் முன்னிலை பெற்று இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் சூழலில் இருக்கிறது .
இந்நிலையில் நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் மழையின் காரணமாக தடைபட்டதால் முதல் நாள் ஆட்டத்தின் போது நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கியிருக்கின்றனர். பாபர் அசாமின் பவுண்டரி தொடர்பான வீடியோ ஒன்றுதான் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது இந்த வீடியோ தொடர்பாக இருதரப்பினரும் எதிர் எதிர் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர் .
முதல் நாள் ஆட்டத்தின் போது இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் அசித்தா பெர்னாண்டோ வீசிய பந்தில் பாபர் அசாம் பவுண்டரி எடுத்தார். இது தொடர்பாக ஒரு சாரார் பாபர் அசாம் அந்தப் பந்தினை பவுண்டரிக்கு விரட்டும் நோக்கத்தில் தான் அப்படி ஆடினார் என்று கருத்து தெரிவித்துள்ளனர் . ஆனால் மற்றொரு தரப்பினர் பாபர் அசாம் அந்தப் பந்தை விக்கெட் கீப்பரிடம் விட்டு விட எண்ணி தனது மட்டையை தூக்கினார் ஆனால் பந்து எதிர்பாராத விதமாக பட்டு பவுண்டரிக்கு சென்றதாக தெரிவித்திருக்கின்றனர்.
இது தொடர்பான வீடியோவில் அசித்தா பெர்னாண்டோ வீசிய ஃபுல் லென்த் பந்தினை முன்னங்காலில் வந்து விக்கெட் கீப்பிரிடம் விடுவதற்காக பாபர் அசாம் தனது பேட்டை உயர்த்தும் நேரத்தில் பந்து அவரது மட்டையில் பட்டு ஸ்லீப் மற்றும் கல்லி ஃபீல்டுக்கு ஊடாக பவுண்டரிக்கு செல்கிறது.
இந்த வீடியோவை உற்று நோக்கும் போது பாபர் அசாம் அந்தப் பந்தை பவுண்டரிக்கு செலுத்தும் நோக்கத்தில் விளையாடியதாகவே தெரிகிறது.
This innovative shot from King Babar Azam 🥵#SLvPAK #PAKvsSL #BabarAzam pic.twitter.com/dlZ0by78TQ
— King Babar Azam Army (@kingbabararmy) July 25, 2023