வீடியோ.. சேப்பாக்கம் என் கோட்டைபா.. ஸ்மித் லபுசேன் கேரி.. 3 செக் வைத்த ஜடேஜா.. ஆஸி அலறல்!

0
229
Jadeja

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. இந்த முறை பும்ரா மார்ஸை களத்தில் அதிக நேரம் வைக்கவில்லை. ரன் ஏதும் இல்லாமல் அவரை அனுப்பி வைத்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் சேர்ந்து 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். வார்னர் குல்தீப் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து, 52 பந்தில் 41 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

ஆஸ்திரேலியா கேப்டன் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும் என்று நம்பி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் சென்னை ஆடுகளம் வழக்கமான தன்னுடைய இயல்புக்கு இந்த முறை மாறிவிட்டது.

ஆடுகளம் மெதுவாக இருந்ததோடு, சில சமயங்களில் பந்து திரும்பவும் செய்தது. இன்னொரு பக்கம் வெயிலும் கொளுத்தியது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

- Advertisement -

சேப்பாக்கத்தை சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா கையில் பந்து கிடைத்ததும், அவர் தன்னுடைய அனுபவத்தை காட்ட ஆரம்பித்தார். அஸ்வின் குல்தீப் மேல் மட்டுமே இருந்த ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் பார்வை இவர் மேல் இல்லை.

இந்த நிலையில் ஜடேஜா ஸ்மித்தை 46 ரன்களில் கிளீன் போல்ட் செய்தார். இதற்கடுத்து லபுஷேனை விக்கெட் கீப்பர் கே எல் ராகுல் இடம் கேட்ச் மூலம் 27 ரன்களில் வெளியே அனுப்பினார். அடுத்து வந்த அலெக்ஸ் கேரியை ரன் கணக்கை துவங்கும் முன்பே எல்பிடபிள்யூ மூலம் ஆட்டமிழக்க செய்து அசத்தினார்.

எப்படியாவது 250 ரன்கள் சேர்த்தால் போதும் என்று விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு, ரவீந்திர ஜடேஜா மூன்று செக் வைத்து, தற்போது பெரிய நெருக்கடியை உருவாக்கி இருக்கிறார். இதை இந்தியா மேற்கொண்டு எப்படி? பயன்படுத்துகிறது என்று பார்க்க வேண்டும்!