வீடியோ.. BBL.. காலுக்கு பேடு கட்டாமல் வந்த பாகிஸ்தான் வீரர்.. இவ்வளவு அலட்சியமா?

0
1511
Rauf

தற்பொழுது ஆஸ்திரேலியாவில் ஐபிஎல் தொடர் போன்ற பிபிஎல் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போல இல்லாமல், ஆஸ்திரேலியா அணி சர்வதேச போட்டிகளில் விளையாடும் காலகட்டத்திலேயே, இந்தத் தொடர் நடத்தப்படுகிறது.

எனவே இதன் காரணமாக ஐபிஎல் தொடர்பு ஒன்று பிபிஎல் தொடருக்கு பெரிய வரவேற்பு கிடையாது. ஆஸ்திரேலியாவின் மொத்த வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்பதாக இருந்தால், அவர்களுக்கு வருடத்தில் ஐபிஎல் தொடரோடு சேர்த்து நான்கு வருடங்கள் இப்படியே கழிந்து விடும். எனவே ஆஸ்திரேலியா முன்னணி வீரர்கள் சில பலர் இந்த தொடருக்கு எப்பொழுதும் கிடைக்க மாட்டார்கள்.

- Advertisement -

இந்த நிலையில்தான் இந்தத் தொடரில் தினம் ஒரு சுவாரசியமான அல்லது வேடிக்கையான நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டே வருகிறது. மிகச் சிறந்த போட்டிகள் மூலமாக தொடர்கள் பிரபலமாகும். ஆனால் இந்த வருடம் பிபிஎல் தொடர் சில வினோத நிகழ்வுகளால் பிரபலமாகி வருகிறது.

இந்தத் தொடர் இந்த வருடம் ஆரம்பித்ததும் மோசமான ஆடுகளத்தின் காரணமாக போட்டி நடைபெறாமல் நிறுத்தப்பட்டது. அடுத்து இங்கிலாந்தின் டாம் கரன் நடுவர் சொல்லியும் கேட்காமல், போட்டிக்கு முன்பாக, போட்டியின் ஆடுகளத்தில் பந்து வீசி நான்கு போட்டி தடை வாங்கினார்.

இந்த நிலையில் மெல்போன் ஸ்டார்ஸ் மற்றும் சிட்னி தண்டர்ஸ் அணிகள் மோதிக்கொண்ட இன்றைய போட்டியில், பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுப், கால்களுக்கு பேட்ஸ் கட்டாமல் வந்து ஆச்சரியப்படுத்தினார்.

- Advertisement -

இன்று நடைபெற்ற போட்டியில் 19.5வது ஓவரில் மெல்போன் ஸ்டார்ஸ் பேட்ஸ்மேன் ஒருவர் பந்துவீச்சாளர் முனையில் ரன் அவுட் ஆனார். இதனால் கடைசி பந்தை சந்திப்பதற்கு பேட்ஸ்மேன் முனையில் இருந்தவர் பாதுகாப்பாக இருந்தார். எனவே கடைசிப் பந்தை சந்திக்க வந்த ஹாரிஸ் ரவுப் பேட்டிங் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதன் காரணமாக அவர் ஹெல்மெட் மற்றும் பேட்ஸ் அணியாமல் வந்தார். அதேபோல் கடைசி பந்தில் விக்கெட் விழ, இவருக்கு மேற்கொண்டு பேட்டிங் செய்யும் வாய்ப்பு வராமல் போனது.

தற்போது இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் ஒருவேளை கடத்திப் பந்து வைடு அல்லது நோ-பால் வீசப்பட்டு ஒரு ரன் எடுத்திருந்தால், ஹாரிஸ் ரவுப் பேட்டிங் செய்ய வந்திருக்க வேண்டும்.

பொதுவாகவே பேட்டிங் செய்ய வாய்ப்பு இல்லை என்றாலும் கூட ஹெல்மெட் மற்றும் பேட்ஸ் போன்றவை கட்டுவது கட்டாய அவசியம். ஏனென்றால் ரன்கள் ஓடும் பொழுது, பில்டிங் செய்யும் அணி பந்தை எறியும் பொழுது, மேலே பட்டு ஆபத்தான காயங்கள் உருவாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் போட்டியை தவற விடுவது மட்டுமல்லாமல், வேறு சில விரும்பத்தகாத ஆபத்துகளும் நடக்கலாம். எனவே ஹாரிஸ் ரவுப் செய்தது சமயோசிதமான வேலை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது!