10 ஓவர்களில் பயம் காட்டிய ஸ்காட்லாந்து.. இங்கிலாந்துக்கு ஏற்பட்ட சிக்கல்.. போட்டியின் முடிவு

0
7878
England

நேற்று இரவு இரண்டு போட்டிகள் டி20 உலகக் கோப்பை தொடரில் நடைபெற்றன. இதில் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் பார்படாஸ் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்காட்லாந்து அணி அற்புதமான துவக்கத்தை பெற்றது.

பி பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து, நமீபியா மற்றும் ஓமான் என ஐந்து அணிகள் இடம் பெற்றிருக்கின்றன. இதில் முதல் சுற்றில் இந்த பிரிவில் ஒவ்வொரு அணிகளும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று பி பிரிவில் உள்ள இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து முதலில் தைரியமாக பேட்டிங் செய்வது என அறிவித்தது. மழையின் காரணமாக போட்டி கொஞ்சம் தாமதமாக ஆரம்பித்தது.

இந்தப் போட்டியில் பவர் பிளே முடிவில் ஸ்காட்லாந்து அணி விக்கெட்டுகள் ஏதும் இழக்காமல் 49 ரன்கள் எடுத்திருந்தது. இதற்கு நடுவில் மழை வந்து மீண்டும் போட்டி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மலைக்குப் பிறகு நடைபெற்ற போட்டியில் 10 ஓவர்கள் மட்டுமே நடைபெற்றது.

- Advertisement -

பத்து ஓவர் மட்டுமே நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்காட்லாந்து அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல் 90 ரன்கள் குவித்தது. ஆனால் மேற்கொண்டு போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் முன்சி 31 பந்தில் 41 ரன்கள், மைக்கேல் ஜோன்ஸ் 30 பந்தில் 45 ரன்கள் எடுத்தார்கள்.

இதையும் படிங்க : சிஎஸ்கே பயிற்சியாளர் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்ட முன்னாள் தமிழக வீரர்.. பின்னணி காரணங்கள் என்ன?

இந்த நிலையில் போட்டி கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டது. மேலும் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியோ அல்லது வெற்றியோ அடைந்தாலும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றால், இரண்டு அணிகளும் ஒரே புள்ளியில் இருக்கும். அப்பொழுது இங்கிலாந்து அணியை விட ஸ்காட்லாந்து அணி அதிக ரன் ரேட் பெற்று இருந்தால், அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஸ்காட்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -