18.4 ஓவர்.. கலக்கலாக ஆரம்பித்த நெதர்லாந்து.. பயமில்லாமல் ஆடிய நேபாள்.. சிறப்பான முடிவு

0
1233
Netherlands

நேற்று டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்காவின் டல்லாஸ் மைதானத்தில் ஆறாவது போட்டியில் நேபாள் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கட்டுக்கோப்பான பந்துவீச்சின் மூலம் நெதர்லாந்து அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மைதானத்தின் கண்டிஷனில் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. இதை பயன்படுத்தி நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பான முறையில் பந்துவீச்சு தாக்குதலை அமைத்தார்கள்.

- Advertisement -

நேபாள் அணியும் பயமில்லாமல் நெதர்லாந்து பந்துவீச்சு தாக்குதலை அடித்து விளையாட முன்னே சென்று விக்கெட்டுகளை கொடுத்து வந்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் பவுடேல் 37 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து கரன் கே.சி 12 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார்.

நேபாள் அணி 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 16 இடங்கள் மட்டுமே எடுத்தது. நெதர்லாந்து அணியின் பந்துவீச்சில் டிம் பிரிங்கில் மற்றும் வான் பீக் இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள். மேலும் வான் மீக்கரன் மற்றும் பாஸ் டி லீட் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணிக்கு மைக்கேல் லெவிட் 3 பந்தில் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கடுத்து வந்த விக்ரம்ஜித் சிங் 28 பந்தில் 22 ரன்கள் எடுத்தார். சைப்ரண்ட் 16 பந்தில் 14 ரன்கள், கேப்டன் எட்வர்ட்ஸ் 8 பந்தில் 5 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : 10 ஓவர்களில் பயம் காட்டிய ஸ்காட்லாந்து.. இங்கிலாந்துக்கு ஏற்பட்ட சிக்கல்.. போட்டியின் முடிவு

ஒரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய மற்றும் ஒரு தொடக்க ஆட்டக்காரர் மேக்ஸ் ஓ டொனால்ட் ஆட்டம் இழக்காமல் 48 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். பாஸ் டி லீட் 10 பந்தில் 11 ரன்கள் எடுத்தார். நெதர்லாந்து அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.