வீடியோ.. AUSvsWI.. அறிமுக போட்டியில் 11வது இடத்தில் 36 ரன்.. முதல் பந்தில் ஸ்மித் விக்கெட்.. யார் இந்த ஷாமார் ஜோசப்

0
237
Joseph

ஆஸ்திரேலியாவின் அடிலைய்ட் ஓவல் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. பெரிய அனுபவம் இல்லாத வெஸ்ட் இண்டிஸ் அணி, அசுர பலத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக களம் இறங்கியது.

- Advertisement -

எதிர்பார்த்தது போலவே வெஸ்ட் இண்டீஸ் அணியால் அனுபவமும் திறமையும் வாய்ந்த ஆஸ்திரேலியாவில் வேகப்பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாட முடியவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணி 188 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் தலா நான்கு விக்கெட் வீழ்த்தினார்கள். இதற்கும் குறைவாகவே வெஸ்ட் இண்டிஸ் அணி சுருண்டு இருக்கும்.

133 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் என்று இருந்த வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு, அறிமுக வீரர் ஷாமார் ஜோசப் பேட்டிங்கில் 11 வது வீரராக வந்து அதிரடியாக 41 பந்தில் 36 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். மேலும் கடைசி விக்கெட்டுக்கு 55 ரன் பார்ட்னர்ஷிப் கிடைத்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க வீரராக வார்னர் இடத்தில் ஸ்மித் வந்தார். இவருடன் வழக்கம்போல இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவஜா களம் வந்தார்.

இருவரும் பொறுமையாக ஆடி ரன்கள் எடுத்துக் கொண்டிருந்த நிலையில், மூன்றாவது பந்துவீச்சாளராக ஷாமார் ஜோசப்பை வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் இறக்கினார். தனது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் பந்தை வீச வந்த அவர் வீச முடியாமல் நிறுத்தி சென்றார்.

பிறகு அவர் வந்து வீசிய முதல் பந்திலேயே ஸ்மித் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து இன்னொரு துல்லியமான பவுன்சர் மூலம் லபுஷேன் விக்கெட்டையும் கைப்பற்றினார். இன்றையமுதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 59 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்து இருக்கிறது.

27 வயதான வெஸ்ட் இண்டிஸ் அணியின் ஷாமார் ஜோசப் உள்நாட்டில் ஐந்து முதல் தர போட்டிகள் மட்டுமே விளையாடியிருக்கிறார். இதில் 21 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ள அவர் மொத்தமாக எடுத்துள்ளது 65 ரன்கள் மட்டுமே. அதிகபட்சம் 20 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் இவர் இடது கையில் பேட்டிங் செய்து, வலது கையில் வேகப் பந்துவீச்சு வீசக்கூடியவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கரீபியன் டி20 தொடரில் அமேசான் வாரியர் அணிக்கு விளையாடுகிறார். அதிரடியாக விளையாட முடிகின்ற காரணத்தினால் இவருக்கு எதிர்காலத்தில் பிரான்சிசைஸ் டி20 கிரிக்கெட்டில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. புதிய திறமைகள் இருக்கிறார்கள் வருவார்கள் என்று லாரா கூடியிருந்தது போல, இன்றைய போட்டியில் ஒருவர் அவர்களுக்கு கிடைத்திருக்கிறார்.