வீடியோ.. பிரமாதப்படுத்திய பிஸ்னாய்.. கோபமடைந்த குர்பாஸ்.. பவர் பிளேவில் மீண்டும் ஆதிக்கம்

0
236
Gurbaz

இன்று இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதல் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்க, இரண்டாவது போட்டியில் வெல்லும் பட்சத்தில் மூன்றாவது போட்டியில் மீதம் இருக்கும் எல்லா வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க முடியும். எனவே இந்த போட்டியை வெல்ல இந்திய அணி முழு ஆர்வம் காட்டும்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியில் மற்றும் திலக் இருவரும் வெளியேற விராட் கோலி மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் இந்திய அணிக்குள் வந்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் அணியில் ரஹமத் ஷா வெளியேற அவருடைய இடத்தில் நூர் அகமது வந்திருக்கிறார்.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் துர்க்காஸ் மற்றும் கேப்டன் இப்ராஹிம் ஜட்ரன் இருவரும் அதிரடியில் ஆரம்பம் முதலில் ஈடுபட்டார்கள்.

ஆப்கானிஸ்தான் துவக்க ஆட்டக்காரர் குர்பாஸ் 8 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பவர் பிளேவில் ரோகித் சர்மா ரவி பிஷ்னாயை கொண்டு வந்தார்.

- Advertisement -

பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் ரன் ரேட்டை பவர் பிளேவில் உயர்த்துவதற்காக குர்பாஸ் ரவி பிஷ்னாயை தாக்கி ஆட முடிவு செய்து, சந்தித்த முதல் பந்தையையே தூக்கி அடிக்க, நேரம் தவறி அந்த பந்து நேராகச் சென்று சிவம் துபே கைகளில் விழுந்தது.

சுலபமாக அடிக்க வேண்டிய பந்தை தவறாக அடித்து ஆட்டம் இழந்த காரணத்தினால் குர்பாஸ் தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் களத்திலேயே வாய்விட்டு கத்தினார். கடைசியில் அந்த ஏமாற்றத்தை தாங்க முடியாமல் களத்தை விட்டு வெளியேறினார்.

இதற்கு அடுத்து அக்சர் படேல் அருமையான பந்து ஒன்றில் இப்ராஹிம் ஜட்ரனையும், மெதுவான பந்து ஒன்றில் சிவம் துபே ஓமர்சாயையும் வீழ்த்தி அனுப்பி வைத்தார்கள்.