வீடியோ; ஆசஷ் சர்ச்சை ரன் அவுட்.. இந்திய அம்பயரை திட்டி தீர்க்கும் ரசிகர்கள் ; அஸ்வின் பாராட்டு!

0
5196
Ashwin

இங்கிலாந்து நாட்டில் தற்பொழுது இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும், ஐந்து போட்டிகள் கொண்ட,உலகப் புகழ்பெற்ற ஆசஷ் கிரிக்கெட் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் நடந்து முடிந்துள்ள நான்கு டெஸ்ட் போட்டிகளில், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா அணி வென்று உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து வென்றது. நான்காவது டெஸ்ட் போட்டியை மழை வென்றது.

- Advertisement -

இந்த நிலையில் ஆஸ்திரேலியா தொடரை வெல்லவும், இங்கிலாந்து தொடரை சமன் செய்யவும் வாய்ப்பிருக்கின்ற, தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது போட்டி, இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் டாசில் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணியின் தாக்குதல் பேட்டிங் முறை இந்த டெஸ்ட் போட்டியில் அவர்களுக்கு முதல் இன்னிங்ஸில் பலன் அளிக்கவில்லை. ஆனாலும் ஹாரி ப்ரூக் மட்டும் வழக்கமான அதிரடி பாணியை மாற்றிக் கொள்ளாமல் 91 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 85 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283 ரன்கள் சேர்த்தது.

இதற்கு அடுத்து தமது முதல் இன்னிங்ஸ் துவங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பத்தில் பெரிதாக எந்த பேட்ஸ்மேனும் நிலைத்து நின்று விளையாடவில்லை. உஸ்மான் கவாஜா மட்டுமே மேல் வரிசையில் 47 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர டெஸ்ட் வீரர் ஸ்டீவன் ஸ்மித் மிகச் சிறப்பாக விளையாடி 123 பந்துகளில் ஆறு பவுண்டரி உடன் 71 ரன்கள் சேர்த்து ஓக்ஸ் பந்துவீச்சில் மிகக் கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

இந்த இன்னிங்ஸ் போது ஸ்மித் பந்தை அடித்து விட்டு ஓடி இரண்டாவது ரன்னுக்கு முயற்சி செய்த பொழுது, இங்கிலாந்து ஃபீல்டர் பந்தை விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் சரியாக எறிய, மிக வேகமாக பேர்ஸ்டோ செயல்பட்டு ஸ்டெம்ப்பை தகர்த்து ரன் அவுட் செய்தார். பார்ப்பதற்கு அவுட் போலவேதான் இருந்தது.

இந்த நிலையில்தான் இங்கிலாந்து ரசிகர்கள் மனம் ஒடிந்து போகும் வகையில், இந்தப் போட்டிக்கு மூன்றாவது நடுவராக செயல்பட்டு வரும் இந்திய நடுவர் நிதின் மேனன் நாட் அவுட் என்று அறிவித்தார். தற்பொழுது இதுதான் மிகப் பெரிய சர்ச்சையாகி இருக்கிறது. இதற்கு ஒருபுறம் இங்கிலாந்து ரசிகர்கள் அவரைத் திட்டி தீர்க்க, மறுபுறம் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய நடுவரை பாராட்டி ட்வீட் செய்திருக்கிறார். இந்த இரண்டுக்குமான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய நடுவர் அவுட் கொடுக்காததற்கு காரணம், ஸ்டெம்ப் அசைந்தாலும் இரண்டு பெயில்ஸ்களும் ஸ்டெம்பை விட்டு முழுதாக விலகவில்லை. குறைந்தபட்சம் ஒரு பெயில்ஸ் ஆவது விலக வேண்டும். இதை மிக நன்றாக உற்று கவனித்த நிதின் மேனன், மிக உறுதியாக நாட் அவுட் என்ற சிறப்பான தீர்ப்பை தந்தார். இதைத்தான் இங்கிலாந்து ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தற்பொழுது ஒன்பதாவது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் டாட் மர்பி இருவரும் இணைந்து அரை சதத்திற்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து, இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட, ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை தாண்ட வைத்து விளையாடி வருகிறார்கள்.