வீடியோ ; மாறாத இந்தியா-பாகிஸ்தான் போட்டி ; இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தல்!

0
215
Ind vs Pak

எட்டாவது டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. பிரதான சுற்றின் இரண்டாவது நாளான இன்று மிகப் பெரிய போட்டியாக பாகிஸ்தான் இந்தியா மோதும் போட்டி அமைந்துள்ளது.

இந்த போட்டிக்கான டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் வழக்கமாக இடம்பெறும் சாகலுக்கு பதில் அஸ்வின் இடம்பெற்றார்.

- Advertisement -

வானிலையும், ஆடுகளமும் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்க இந்திய பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் அசத்தினார்கள். அர்ஸ்தீப் சிங் தனது முதல் மற்றும் இரண்டாவது ஓவரில் பாபர், ரிஸ்வான் இருவரையும் வெளியேற்றி பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த ஷான் மசூத் மற்றும் இப்திகார் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி 52 மற்றும் 51 ரன்கள் அடித்தனர். இதற்கிடையில் இறுதிக்கட்டத்தில் வந்த ஷாகின் 8 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 159 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி தரப்பில் அர்ஸ்தீப் 4 ஓவர்கள் பந்துவீசி 32 ரன்கள் தந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் பந்துவீசி 30 ரன்கள் தந்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். புவனேஸ்வர் குமார் 4 ஓவர்கள் பந்துவீசி 22 ரன்கள் தந்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். முகமது சமி 4 ஓவர்கள் பந்துவீசி 25 ரன்கள் தந்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

தற்பொழுது இந்திய அணிக்கு 160 ரன்களை பாகிஸ்தான் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய இடம்பெற்றிருக்கும் குழு அமைந்துள்ள விதத்தில் இந்த போட்டி இந்திய அணிக்கு மிகமுக்கிய போட்டியாகும். இந்திய அணியின் பலம் பேட்டிங் தான். எனவே இந்திய அணி ரசிகர்கள் இந்த இலக்கை இந்திய அணி எட்டும் என்று பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்!