வீடியோ.. ரிவ்யூ எடுக்காமல் கடுப்பாக்கிய பரத் ரோகித்.. சொல்லி எடுத்த பும்ரா.. மாஸ் சம்பவம்

0
554
Bumrah

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 246 ரன்கள் எடுக்க, இந்திய அணி 436 ரன்கள் எடுத்து, 190 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.

இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி மீண்டும் தங்களது அதிரடியான பாஸ்பால் அணுகுமுறையைக் கைவிடாமல் தொடர்ந்து பின்பற்றி அசத்தி வருகிறது.

- Advertisement -

190 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் அச்சமின்றி விளையாடினார்கள்.

அதிரடியாக விளையாடிய துவக்க ஆட்டக்காரர் ஜாக் கிரவுலி 31 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்துவீச்சில் ரோஹித் சர்மா வசம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.

இதற்கு அடுத்து மற்றுமொரு துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் மற்றும் போப் இருவரும் இணைந்து அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்தார். இதில் இடதுகை வீரர் அதிரடியில் மிரட்டினார்.

- Advertisement -

இந்த நிலையில் பும்ரா பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்து உள்ளே வீச, நொடியில் உள்ளே வந்த பந்தை கால் காப்பில் வாங்கினார் பென் டக்கெட். இந்த நிலையில் பும்ரா நடுவரிடம் முறையிட அவுட் கொடுக்கப்படவில்லை.

ரோஹித் சர்மா ரிவ்யூ கேட்பது குறித்து விக்கெட் கீப்பர் கேஎஸ்.பரத்தை முழுமையாக நம்பி இருக்கிறார். கே எஸ் பரத் ரிவ்யூ கேட்க வேண்டாம் என்று கூற, ரோகித் சர்மா ரிவ்யூ கேட்கவில்லை.

ஆனால் சிறிது நேரம் கழித்து பெரிய திரையில் பும்ரா வீசிய பந்து ஸ்டெம்பை துல்லியமாக தாக்க அது அவுட் என தெரிந்தது. இங்கிலாந்து நூறு ரன்களை தாண்டி இருக்க, அருமையான வாய்ப்பைத் தவறவிட்டதால் பும்ரா களத்திலேயே தன்னுடைய விரக்தியை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க : “முதல் நாள் பந்து இவ்வளவு டர்ன் ஆவதை எதிர்பார்க்கல” – வாக்குறுதியை மீறிய இங்கிலாந்து வீரர் கிரவுலி

ஆனாலும் அந்த ஏமாற்றத்தை பந்துவீச்சில் காட்டாமல் அடுத்த ஓவருக்கு வந்து, பென் டக்கெட்டை செட் செய்து, ரிவர்ஸ் ஸ்விங் மூலமாக மீண்டும் பந்தை உள்ளே கொண்டு வந்து, கிளீன் போல்ட் செய்து வெளியேற்றி அசத்தினார். ரோகித் சர்மாவுக்கு அப்பொழுதுதான் மீண்டும் உயிரே வந்தது போல இருந்தது.

இந்த நிலையில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ரிவர்ஸ் ஸ்விங் கலையை பயன்படுத்தி மீண்டும் மிக முக்கிய விக்கெட்டான ஜோ ரூட் விக்கெட்டை எல்பிடபிள்யு மூலம் வீழ்த்தி மீண்டும் ஆச்சரியப்படுத்தினார். உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர் தான் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் பும்ரா!