“முதல் நாள் பந்து இவ்வளவு டர்ன் ஆவதை எதிர்பார்க்கல” – வாக்குறுதியை மீறிய இங்கிலாந்து வீரர் கிரவுலி

0
180
England

ஆசியா தாண்டி வெளியில் இருந்து இந்தியாவுக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வரும் எல்லா நாடுகளும், இந்திய ஆடுகளங்களை குறை சொல்லாமல் கிளம்பியது கிடையாது.

இதில் மிக முக்கியமாக இருக்கக்கூடிய இரண்டு நாடுகள் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து. இவர்கள் இந்திய ஆடுகளங்களையும், ஆடுகளங்களை அமைக்கின்ற நோக்கத்தையும் மிகக் கடுமையான விமர்சனங்களின் மூலமாக, குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளிப்பார்கள்.

- Advertisement -

கடந்த ஆண்டில் இங்கு ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் விளையாட வந்த பொழுது, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் விமர்சனங்களை தாண்டி இந்திய கிரிக்கெட்டின் மீது குற்றச்சாட்டுகளை கூற ஆரம்பித்தார்கள். அது மிக மோசமானதாக இருந்தது.

இந்த நிலையில் தற்பொழுது இந்தியா வந்திருக்கும் இங்கிலாந்து அணி ஆடுகளங்களை பற்றி நாங்கள் எந்த புகார்களையும் கூறப்போவதில்லை என்று ஏற்கனவே துவக்க ஆட்டக்காரர் டக்கெட் மூலம் அறிவித்திருந்தது. ஆனாலும் ஆடுகளத்தில் பந்து அதிகமாக திரும்புவது இந்தியாவுக்கு ஆபத்து என்று இங்கிலாந்து தரப்பில் முன்னாள் வீரர்கள் பேசி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் என்ன நடந்தும் இங்கிலாந்தின் புகார் கூறும் முறை மட்டும் இன்னும் மாறவே இல்லை. இன்றைய நாள் ஆட்டத்திற்கு முன்பாக இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜாக் க்ரவுலி குற்றச்சாட்டை மெதுவாக ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

- Advertisement -

அவர் கூறும் பொழுது “முதல் நாளில் பந்து அவ்வளவு திரும்பியதை பார்த்து நாங்கள் ஆச்சரியப்பட்டோம். நேற்று இன்னும் அது அதிகமாகும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். இன்று நாங்கள் அந்த பந்து திரும்புவதை வைத்து விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்துவோம்.

நான் உலகம் முழுவதும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். குறிப்பாக இங்கிலாந்து பாகிஸ்தானில் நிலைமைகள் ஒரே மாதிரி இருக்கின்றன. ஆனால் பாகிஸ்தானில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆவது, பந்து ஸ்கிட் ஆவது என்று இருக்கிறது. ஆனால் இந்தியாவில் பந்து பெரிய அளவில் திரும்புகிறது.

இதையும் படிங்க : 80,86,87.. சதம் இல்லாமல் 436 ரன்கள்.. இந்தியா வலிமையான முன்னிலை.. இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா?

இப்பொழுதும் எங்களுடைய அதிரடியான அணுகு முறையிலேயே விளையாட விரும்புகிறோம். எப்போதும் பாசிட்டிவாக இருப்பதற்கான வழிகளை தேர்ந்தெடுப்போம். நாங்கள் நிலைமைகளுக்கு விளையாடுவோம் ஆனால் அதற்காக அதை சிக்கலானதாக மாற்ற மாட்டோம். எங்களிடமிருந்து மேலும் ரன்கள் வரும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.