வீடியோ.. கைவசம் 9 விக்கெட்.. தேவை 3 பந்துக்கு 4 ரன்.. ஹாட்ரிக் அடித்த அதிவேக பந்துவீச்சு வீராங்கனை!

0
1303
Hundred

தற்பொழுது இங்கிலாந்தில் நூறு பந்துகள் அளவு வைத்து நடத்தப்படும் ஹன்ட்ரட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் என்ன சிறப்பு என்றால் ஆண் பெண் இருவருக்கும் தனித்தனியாக ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தத் தொடரில் மொத்தம் 20 ஓவர்கள் உண்டு. ஆனால் ஒரு ஓவருக்கு ஐந்து பந்துகள்தான். எனவே மொத்தமாக இந்த போட்டியில் ஒரு அணிக்கு 100 பந்துகள். எனவே இந்த தொடரும் 100 பந்து போட்டி என்று அழைக்கப்படுகிறது.

- Advertisement -

மேலும் இதில் ஒரு தனிச்சிறப்பாக ஒரு வீரர் குறைந்தபட்சம் ஐந்து பந்துகள் கொண்ட ஓவரை வீசலாம். இப்படி ஒரு பந்துவீச்சாளருக்கு ஐந்து பந்துகள் கொண்ட நான்கு ஓவர்கள் தரப்படும். அதுவே அந்த கேப்டன் விருப்பப்பட்டால் அந்த வீரரை மேற்கொண்டும் ஓவர்களை தொடர்ந்து வீசவும் செய்யலாம்.

இன்று வெல்ஸ் ஃபயர் மற்றும் பர்ஃமிங்காம் போனிக்ஸ் இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டியில், முதலில் டாப்பில் தோற்று வெல்ஸ் ஃபயர் அணி பேட்டிங் செய்தது.

அந்த அணிக்கு கேப்டன் மற்றும் துவக்க வீராங்கனையாக வந்த டாமி பியூமன்ட் 40 பந்துகளில் 59 ரண்களும், சோபியா டன்க்ளே 19 பந்தில் 25 ரன்கள் எடுக்க 100 பந்துகள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் வந்தது.

- Advertisement -

இதை எடுத்து இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்த பர்மிங்காம் போனிக்ஸ் அணிக்கு நியூசிலாந்தின் துவக்க வீராங்கனை சோபியா டிவைன் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து துவக்க வீராங்கனை டெஸ் பிளின்ட்டாப் மூன்றாவதாக வந்த எமி ஜோன்ஸ் உடன் இணைந்து மிகச் சிறப்பாக விளையாடி அரை சதம் தாண்டினார். இந்த நிலையில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து, கடைசி ஓவரான கடைசி ஐந்து பந்துகளில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது.

இந்த நிலையில் அந்த ஓவரை உலகின் அதிவேக பந்துவீச்சு வீராங்கனை ஆன தென் ஆப்பிரிக்காவின் சப்னிம் இஸ்மாயில் வீசினார். அந்த ஓவரில் முதல் இரண்டு பந்துகளில் ஒரு பவுண்டரி உடன் 5 ரன்கள் வந்தது. இதை அடுத்து மூன்று பந்துகளில் நான்கு ரன்கள் தேவைப்பட்டது.

மிக எளிதாக பர்மிங்காம் போனிக்ஸ் அணி வென்றுவிடும் என்று எதிர்பார்த்து இருந்த வேளையில், சப்னிம் இஸ்மாயில் தனது சிறப்பான வேகப்பந்து வீச்சின் மூலம் அடுத்தடுத்து மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தனது அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். இந்த பரபரப்பான ஹட்ரிக் வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.