வீடியோ.. 6,6.. 350 ஸ்ட்ரைக் ரேட் .. பேட்டிங்கில் மாஸ் காட்டிய புவனேஸ்வர் குமார்.. பௌலிங்கிலும் கலக்கல்.!

0
1892

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூர் நகரில் வைத்து உத்திர பிரதேஷ் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகள் உத்தரபிரதேசம் மாநில கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டி தொடரில் புவனேஸ்வர் குமார் ரிங்கு சிங் நித்திஷ் ரானா மற்றும் மோசின் கான் ஒன்றா ஐபிஎல் நட்சத்திரங்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்த கிரிக்கெட் லீக் தொடரின் 12-வது போட்டியில் நொய்டா சூப்பர் கிங்ஸ் மற்றும் மீரட் மாவரிக்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய மிரட்ட அணி நான்கு ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில் உண்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நொய்டா அணியை அபாரமாக வீழ்த்தியது . இந்தப் போட்டியில் நொய்டா அணிக்காக விளையாடிய இந்தியா அணியின் ஆல்ரவுண்டர் புவனேஸ்வர் குமார் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டார் .

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய நொய்டா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் துவக்க வீரர் அல்மாஸ் சௌகத் 47 ரன்களும் மற்றொரு துவக்க வீரர் சமர்த் 36 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து இறுதி கட்டத்தில் ஆட வந்த இந்திய அணியின் ஆல்ரவுண்டர் புவனேஸ்வர் குமார் அதிரடியாக விளையாடி நான்கு பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார் . இதில் அவர் அடுத்தடுத்து அடித்த இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். மிகச் சிறப்பாக விளையாடிய புவனேஸ்வர் குமார் 350 ஸ்டிரைக் ரேட் இல் விளையாடி மூன்று பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் இறுதி ஓவரில் ஆட்டம் இழந்தார் .

பேட்டிங்கில் மட்டும் சிறப்பாக செயல்படாமல் பந்து வீச்சிலும் மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் நான்கு ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். நொய்டா அணி குவித்த 172 ரன்களை மீரட் அணியினர் 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றனர். மீரட் அணியின் சுவாஸ்திக் சிக்காரா மிகச் சிறப்பாக விளையாடி 56 பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அந்த அணியின் மற்றொரு துவக்க வீரரான சோயப் சித்திக் 28 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் .

ஐபிஎல் நட்சத்திரம் ரிங்கு சிங் 12 பந்துகளில் 23 ரன்கள் உடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர்களின் அதிரடி ஆட்டத்தினால் மீரட் அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இந்த யுபிஎல் கிரிக்கெட் தொடரில் புவனேஸ்வர் குமார் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த போட்டிகளில் பந்துவீச்சின் மூலம் தனது திறமையை நிரூபித்த அவர் இந்தப் போட்டியில் திறமையான பேட்டிங் மூலம் அதிரடியை காட்டினார். ஆனாலும் இவர் தொடர்ந்து இந்திய அணியில் இருந்து நிராகரிக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

கடைசியாக 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டி தொடரில் விளையாடினார் புனேஷ்வர் குமார். மேலும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய அணிக்காக கடைசி ஒரு நாள் போட்டியில் விளையாடியிருக்கும் இவர் 2018 ஆம் ஆண்டு இறுதியாக இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார் . அதன் பிறகு இவர் இந்திய அணியின் தேர்விற்கு பரிசீலிக்கப்படவில்லை .

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் அனைத்து விதமான உள்ளூர் போட்டிகளிலும் கிரிக்கெட் விளையாடி வருகிறார் புவனேஸ்வர் குமார். இந்த உத்தர பிரதேச கிரிக்கெட் லீக் தொடரில் தன்னுடைய மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் பந்துவீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் . அதன் வீடியோ இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது