வீடியோ.. 6, 6, 2, 4, 6.. மும்பை ரசித் கானை பொளந்து கட்டி சூப்பர் கிங்ஸை கரையேற்றிய கிளாசன்!

0
1683
Rashid

ஆறு அணிகள் பங்கு பெற்று விளையாடும் டி20 லீக் தொடர் தற்போது அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் என்ற பெயரில் நடைபெற்று வருகிறது!

ஐபிஎல் தொடர் போல மற்ற அணிகளுக்கு எதிராக இரண்டு முறை விளையாடுவது போல் இல்லாமல் ஒரு முறை விளையாடுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். ப்ளே ஆப் சுற்றும் மட்டும் ஐபிஎல் தொடரில் நடத்தப்படுவதைப் போலவே விதிகளைக் கொண்டு நடத்தப்படுகிறது.

டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் லீக் சுற்றில் ஐந்து ஆட்டங்களையும் விளையாடி, புள்ளி பட்டியலில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் இருந்தன. அதே சமயத்தில் சீட்டில் ஆர்கஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிகள் நான்கு ஆட்டங்களில் மட்டும் விளையாடி முதல் மற்றும் நான்காம் இடங்களில் இருந்தன.

இந்த நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி இன்று நடைபெற்றது. இதில் மும்பை வென்றால் முதல் இடத்திற்கு முன்னேற முடியும் அதே சமயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும். இப்படியான சூழலில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி 8 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது.

- Advertisement -

முக்கியமான போட்டியில் பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய சீட்டில் ஆர்கஸ் அணிக்கு துவக்க வீரர் நுவ்மான் அன்வர் 50 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் தந்தார். ஆனால் இவரோடு சேர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்காவின் ஹென்றி கிளாஸனுக்கு எந்த வீரர்களிடம் இருந்தும் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

ஆனாலும் தனிப்பட்ட முறையில் நின்று மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியின் பந்துவீச்சை சிதறடித்து அபாரமாக ரன்கள் குவித்தார் கிளாசன். அவரது பேட்டில் படும் பந்துகள் பவுண்டரி எல்லைகளுக்கு காற்றிலும் தரையிலும் பறந்தன.

இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டின் அபாயகரமான பந்துவீச்சாளரான ஆப்கானிஸ்தான் ரஷீத் கான் 16 வது ஓவரை வீச வந்தார். அதுவரை அதிரடியாக மட்டுமே விளையாடி வந்த கிளாசன், ரஷீத் கானை கண்டதும் ஜெட் வேகத்தில் தனது ஆட்டத்தை மாற்றினார். ரஷித் கானின் அந்த ஓவரில் முதல் ஐந்து பந்துகளில் 6, 6, 2, 4, 6 என 24 ரன்கள் குவித்து மிரட்டி விட்டார். இதற்கான வீடியோ இணைப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அடுத்து 18 வது ஓவரை வீச வந்த ட்ரெண்ட் போல்ட் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை எடுத்து சீட்டில் ஆர்கஸ் அணிக்கு தலைவலியை உண்டாக்கினார். ஆனாலும் அசராத கிளாஸன் மேற்கொண்டு பவுண்டரி சிக்ஸர்களை விளாசி அணியை வெற்றி பெற வைத்ததோடு, 44 பந்துகளில் ஒன்பது பவுண்டரி 7 சிக்ஸர்களுடன் 110 ரன்கள் குவித்தும் அசத்தினார்.

இவரது ஆட்டத்தின் காரணமாக டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் தனது இரண்டாவது இடத்தை தக்கவைத்து நேரடியாக இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்றில் சீட்டில் ஆர்கஸ் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.