வீடியோ.. 55ரன் 3விக்கெட்.. ரிங்கு ஸ்பெஷல் ஷோ.. ஃபினிஷிங் கிங்காக மாஸ் பேட்டிங்!

0
519
Rinku

தற்பொழுது இந்திய தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே இரண்டாவது டி20 போட்டி, கியூபர்கா செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் தோற்க, மழை வருவதற்கான அறிகுறிகள் இருந்த காரணத்தினால், தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச முடிவு செய்தது.

- Advertisement -

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்கள். ருதுராஜுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இதற்கு அடுத்து சூழ்நிலையை பற்றி கவலைப்படாமல் அதிரடியாக திலக் வர்மாவும் கேப்டன் சூரியகுமார் யாதவும் விளையாட ஆரம்பித்தார்கள். திலக் வர்மா 5.5 ஓவரில் 55 ரன்கள் இந்திய அணி எடுத்திருந்தபொழுது ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் கேப்டன் சூர்யா குமார் யாதவ்வுடன் இணைந்த ரிங்கு சிங் எடுத்ததும் பவுண்டரியுடன் தனது கணக்கை ஆரம்பித்தார். சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 36 பந்தில் 56, ஜிதேஷ் சர்மா மூன்று பந்தில் ஒரு ரன் எடுத்து முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை பறி கொடுத்தார்கள்.

இதனால் ரிங்கு சிங் அதிரடிக்கு செல்வது கடினமாக இருந்தது. ஆனாலும் புத்திசாலித்தனமாக பந்தை தரையில் அடித்து பவுண்டரிகள் எடுத்தார். சிறப்பாக விளையாடிய அவர் 30 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன், தனது முதல் சர்வதேச டி20 அரைசதத்தை அடித்தார். பந்தை சிக்ஸர் அடிக்க முயற்சி செய்யவே இல்லை.

இதற்குப் பிறகு கடைசி இரண்டு ஓவர் இருக்கும் பொழுது, எய்டன் மார்க்ரம் வீசிய 19வது ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டு அசத்தினார். கடைசியாக அவருக்கு வாய்ப்பு கிடைத்த போட்டிகளில் ஒரே போட்டியில் மட்டுமே ஒற்றை இலக்கத்தில் ஆறு ரன்கள் எடுத்து வெளியேறி இருக்கிறார். மீதி எல்லா போட்டிகளிலும் 20 ரன்கள் தாண்டி எடுத்திருக்கிறார்.

பினிஷிங் ரோலில் ரிங்கு சிங் வெளிப்படுத்தும் புத்திசாலித்தனமான ஆட்டம் தொடர்ந்து வருகிறது. அதே சமயத்தில் இன்று அவர் மொத்தமாக 15 ஓவர்கள் களத்தில் நின்று ஆட்டம் இழக்காமல் விளையாடியிருக்கிறார். தன்னால் மிடில் வரிசையிலும் விளையாட முடியும் என்று நிரூபித்து இருக்கிறார். மேலும் டி20 உலக கோப்பை இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்திருக்கிறார்

ஆட்டம் முடிவதற்கு மூன்று பந்துகள் மீதம் இருந்த நிலையில் மழை வந்த காரணத்தினால் போட்டி நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ரிங்கு சிங் 39 பந்துகளில் 68 ரன்கள் எடுக்க, இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்திருக்கிறது.

- Advertisement -