வீடியோ.. 50 ரன்.. 28 பந்து.. கம்பீர் லெஜெண்ட்ஸ் லீகில் அதிரடி.. நாக் அவுட் போட்டியில் கேப்டன் நாக் ஆடி அசத்தல்.!

0
757

ஆறு அணிகள் கலந்து கொள்ளும் லெஜெண்ட்ஸ் லீக் டி20 போட்டி தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகளின் முடிவில் நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் இன்று எலிமினேட்டர் போட்டி நடைபெற்று வருகிறது.

இன்று ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் கௌதம் கம்பீர் தலைமையிலான இந்தியா கேப்பிட்டல் அணியும் பார்த்தீவ் பட்டேல் தலைமையிலான குஜராத் ஜெயண்ட் அணிகளும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்பிட்டல் அணிக்கு அந்த அணியின் கேப்டன் கௌதம் கம்பீர் மிகச் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தார். அதிரடியாக விளையாடிய அவர் 30 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்

இந்தியா கேப்பிட்டல் அணியின் அனைத்து வீரர்களும் அதிரடியாக ஆடியதால் அந்த அணி 20 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட்டுகள் இழந்திருந்தது. அந்த அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலியா வீரர் பென் டன்க் அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் நான்கு சிக்ஸர்களுடன் 30 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

மேலும் பரத் சிப்பிலி பதினாறு பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்தார். இவர்கள் தவிர இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் கெவின் பீட்டர்சன் 26 ரன்களும் மேற்கிந்திய தீவுகள் அணியின் ரிக்கார்டோ பவல் 28 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

எனினும் கௌதம் கம்பீரின் அதிரடி ஆட்டம் அந்த அணி மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க உதவியது. கௌதம் கம்பீர் இந்திய அணிக்காக விளையாடும் போதும் நாக் அவுட் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். 2007 ஆம் வருட டி20 உலக கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு அதிக ரன்களை குவித்த வீரர் இவர்தான்.

அதைப்போல இந்த நாக் அவுட் போட்டியிலும் மிகச் சிறப்பாக விளையாடி அரை சதம் எடுத்தார். கேப்டன் பொறுப்பை உணர்ந்து துவக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அவர் அரை சதம் எடுத்து தனது அணிக்கு சிறப்பான ஒரு துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

கம்பீரின் அதிரடி துவக்கம் எலிமினேட்டர் போட்டியில் இந்திய கேப்பிட்டல் அணி 200 ரன்களுக்கு மேல் குவிக்க காரணமாக அமைந்தது. இவரது அதிரடி ஆட்டத்தின் வீடியோ இந்த பதிவுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது .

இதனைத் தொடர்ந்து ஆடிவரும் குஜராத் அணி தற்போது வரை 16 ஓவர்களுக்கு 185 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட்டுகள் இழந்திருக்கிறது. அந்த அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் 50 பந்துகளில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் ஒன்பது பவுண்டரிகளுடன் 80 ரன்களில் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவருடன் கெவின் ஓ ப்ரைன் 25 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஐந்து பௌண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆக உள்ளார். குஜராத் அணி வெற்றி பெறுவதற்கு 24 பந்துகளில் 49 ரன்கள் எடுக்க வேண்டும்.