வீடியோ.. 41ரன் 8விக்கெட்.. 6வருடம் கழித்து புவனேஸ்வர் குமார் அதிரடி.. இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா?

0
236
Bhuvaneshwar

2024-25 ஆண்டுக்கான இந்தியாவின் உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி கடந்த வாரம் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதில் கான்பூர் மைதானத்தில் உத்தரப்பிரதேசம் மற்றும் பெங்கால் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற பெங்கால் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

- Advertisement -

பெங்கால் அணியின் அபார பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் உத்தரப்பிரதேச அணி வெறும் 60 ரன்களில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி கொடுத்தது.

இதற்கு அடுத்து நேற்று முதல் நாள் முடியும் பொழுது பெங்கால் அணி 90 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து இருந்தது. இந்த ஐந்து விக்கெட்டுகளையும் ஆறு வருடம் கழித்து ரஞ்சி டிராபிக்கு திரும்பி இருந்த நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் கைப்பற்றினார்.

இன்று தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் எடுத்தது. இதற்கு அடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய உத்தர பிரதேச அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பில்லாமல் 46 ரன்கள் எடுத்திருக்கிறது.

- Advertisement -

உத்தரப்பிரதேச அணியின் முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் 21 ஓவர்கள் பந்து வீசி, 5 மெய்டன்கள் செய்து, 41 ரன்கள் மட்டும் விட்டுத் தந்து, எட்டு விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியிருக்கிறார்.

இந்திய அணிக்காக கடைசியாக புவனேஸ்வர் குமார் 2018 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் பங்கேற்று இருந்தார். ஒட்டு மொத்தமாக இந்திய அணிக்காக 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விளையாடி இருந்தார். இதற்குப் பிறகு அவரை எந்த வடிவிலான இந்திய கிரிக்கெட் அணியிலும் தேர்வு செய்யப்படவில்லை.

புவனேஸ்வர் குமார் நடுவில் காயத்திற்கு பிறகு தனது வேகத்தை இழந்தார். இதன் காரணமாக அவர் புதிய பந்தில் ஸ்விங் செய்தாலும் கூட, ஆட்டத்தின் நடுப்பகுதி மற்றும் கடைசியில் பெரிய அளவில் தாக்கத்தை உண்டாக்கமுடியவில்லை. மேலும் ஸ்விங் கண்டிஷன் இல்லையென்றால் அவரது பந்துவீச்சு எடுபடவில்லை.

தற்பொழுது மீண்டும் நல்ல பந்துவீச்சு பார்முக்கு அவர் திரும்பி இருப்பது தெரிகிறது. மேலும் இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளராக பிரசித் கிருஷ்ணா காயமடைந்து இருப்பதால், அவருடைய இடம் காலியாக இருக்கிறது. எனவே புவனேஸ்வர் குமாரை மீண்டும் இந்திய அணியில் ஒன்று இரண்டு வருடங்கள் பார்ப்பதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது. இந்திய தேர்வுக்குழு என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.