வீடியோ; சிஎஸ்கே-காக 200வது சிக்ஸர் அடித்த தல தோனி!

0
127
MSD

இந்திய ரசிகர்கள் தாண்டி உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் டி20 தொடரின் 16வது சீசன் இன்று அகமதாபாத் மைதானத்தில் சென்னை குஜராத் அணிகளுக்கு இடையே கோலாகலமாக ஆரம்பித்தது!

இந்த போட்டிக்கான டாசில் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பீல்டிங்கை தேர்வு செய்ய சென்னை அணிக்கு துவக்கம் தர கான்வே மற்றும் ருத்ராஜ் ஜோடி களமிறங்கியது.

- Advertisement -

முதல் விக்கட்டாக கான்வே ஒரு ரன்னில் முகமது சமி பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மொயின் அலி மட்டும் கொஞ்சம் தாக்கு பிடித்து 17 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ருதுராஜ் க்கு ஒத்துழைப்பு தந்தார்.

இதற்கு அடுத்து வந்த ஸ்டோக்ஸ் ஆறு பந்தில் 7 ரன்கள், அம்பதி ராயுடு 12 பந்தில் 12 ரன்கள். சிவம் டுபே 18 பந்தில் 19 ரன்கள். ரவீந்திர ஜடேஜா இரண்டு பந்தில் ஒரு ரன் என வந்த வழியே கிளம்பி கொண்டு இருந்தார்கள்.

இது ஒருபுறம் சரிவுகள் ஏற்பட்டு கொண்டு இருந்தாலும் இன்னொரு புறம் இளைஞர் ருத்ராஜ் மிகச் சிறப்பாக விளையாடி 50 பந்தில் 9 சிக்ஸர்கள் நான்கு பவுண்டரிகள் உடன் 92 ரன்கள் குவித்து சென்னை அணிக்கு நல்ல அடித்தளத்தை ஏற்படுத்தித் தந்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கடுத்து கடைசியில் களம் கண்ட சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடைசி ஓவருக்கு முன் ஓவரின் கடைசி பந்தை தன்னுடைய ஸ்டைலில் சிங்கிளுக்கு ஆடி கடைசி ஓவரை தன் வசம் வைத்துக் கொண்டார்.

கடைசி ஓவரை அயர்லாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் லிட்டில் வீச, ஸ்கொயர் லெக் திசையில் மகேந்திர சிங் தோனி அபாரமான சிக்ஸர் ஒன்றை பறக்க விட்டார். இந்த சிக்சர் அவருக்கு சிஎஸ்கே அணிக்காக அவர் அடித்த இருநூறாவது சிக்சர் ஆகும். மேலும் அந்த ஒரு ஓவரில் ஒரு பவுண்டரியும் அடித்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 178 ரன்கள் சேர்த்தது. மகேந்திர சிங் தோனி 7 பந்தில் ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர் உட்பட 14 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

குஜராத் அணி தரப்பில் நான்கு ஓவர்கள் பந்துவீசி ரசித் கான் 26 ரன்கள் மட்டும் விட்டு தந்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகமது சமி நான்கு ஓவர்கள் பந்துவீசி 29 ரன்கள் விட்டுத் தந்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். 200 ரன்களை கடக்க வேண்டிய சென்னை அணிக்கு ருத்ராஜ் தவிர முன்பு இறங்கிய மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் சரியாக விளையாடாததால், வெற்றிக்கும் தோல்விக்கும் நடுவிலான ஒரு இலக்கை நிர்ணயித்து இருக்கிறது!