வீடியோ.. 2 விக்கெட் 4 எக்கனாமி.. இன்ஸ்விங்கர்.. பழைய புவி ரிடர்ன்.. உலக கோப்பை இந்திய அணியில் வாய்ப்பு இருக்கா?

0
1381

உத்திர பிரதேசம் மாநிலத்தில் தற்போது உத்திர பிரதேஷ் கிரிக்கெட் லீக் என்ற டி20 கிரிக்கெட் தொடர் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீப காலமாகவே இந்தியாவின் தமிழ்நாடு கர்நாடகா மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அந்தந்த மாநில கிரிக்கெட் சங்கங்கள் சார்பாக ஐபிஎல் போன்ற கிரிக்கெட் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

இதே போன்ற கிரிக்கெட் லீக் தொடர்களை இன்று பல்வேறு மாநிலங்களும் நடத்த தொடங்கி இருக்கின்றன. சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் மற்றும் உத்தரப்பிரதேச கிரிக்கெட் சங்கம் ஆகியவையும் டி20 லீக் போட்டித் தொடரை நடத்தி வருகிறது . இந்தப் போட்டித் தொடர் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது .

- Advertisement -

இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளுமே உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் நகரில் அமைந்துள்ள கிரீன் பார்க் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் நேற்று நொய்டா சூப்பர் கிங்ஸ் மற்றும் கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணிகள் முதல் போட்டியில் விளையாடின. இதில் நொய்டா சூப்பர் கிங்ஸ் அணிக்காக புவனேஸ்வர் குமார் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நித்திஷ் ராணா ஆகியோர் பங்கேற்று விளையாடினர்.

புவனேஸ்வர் குமார் இந்திய டி20 அணியின் சிறந்த பந்துவீச்சாளராக விளங்கியவர். கடைசியாக அவர் இந்திய அணிக்காக நவம்பர் 2022 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் வைத்து நடைபெற்ற டி20 போட்டியில் விளையாடினார். அதன் பிறகு தொடர்ந்து இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டு வருகிறார். இவர் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உத்தர பிரதேஷ் கிரிக்கெட் லீக் போட்டியில் நொய்டா அணிக்காக விளையாடிய புவனேஸ்வர் குமார் நேற்றைய போட்டியில் 26 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் குறிப்பாக இவரது ட்ரேட் மார்க் இன் ஸ்விங் மூலம் கான்பூர் அணியின் பேட்ஸ்மேன் ரிஸ்வியை கிளீன் போல்ட் செய்தது புவனேஸ்வர் குமாரின் சர்வதேச கிரிக்கெட் தொடக்கத்தை ரசிகர்களுக்கு ஞாபகப்படுத்துவதாக இருந்தது. மேலும் புவனேஸ்வர் குமார் கான்பூர் அணியின் கேப்டன் அக்ஷதிப் நாத் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நோயுடா சூப்பர் கிங்ஸ் அணி 20 ஊர்களில் 169 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து இருந்தது. அந்த அணியின் சம சமர்த் சிங் சிறப்பாக விளையாடி 53 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 91 ரன் எடுத்தார். இதனைத் தொடர்ந்து ஆடிய கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணியினர் 20 ஓவர்களில் 153 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர். அந்த அணியில் சமீர் ரிஸ்வி அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்திருந்தார். நொய்டா அணியின் பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் நான்கு ஓவர்களில் வெறும் 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அவர் சராசரியாக ஒரு ஓவருக்கு விட்டுக் கொடுத்த எக்கானமி 4 ரன்கள் மட்டுமே.

இந்திய அணியின் சிறந்த தோழர்களில் ஒருவராக விளங்கிய புவனேஸ்வர் குமார் இந்த வருட ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அவருக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இருந்தே புவனேஸ்வர் குமார் தொடர்ந்து இந்திய அணி நிர்வாகத்தால் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. தற்போது நடைபெற்று வரும் உத்தர பிரதேச கிரிக்கெட் லீக் போட்டிகளிலும் சிறப்பாக தொடங்கி இருக்கிறார் புவி. இந்த லீக் கிரிக்கெட் போட்டிகளில் ரிங்கு சிங் புவனேஸ்வர் குமார் நித்திஷ் ராணா மோசின் கான் சிவம் மாவி போன்ற ஐபிஎல் நட்சத்திரங்களும் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புவனேஸ்வர் குமார் வீழ்த்திய விக்கெட் வீடியோ இந்தப் பதிவு உடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.