வீடியோ.. 186 நாட்கள் வாய்ப்பில்லை.. 2 விக்கெட் 3 பந்தில்.. வரலாற்று சாதனையை நோக்கி யுஸ்வேந்திர சஹால்

0
461

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் இல் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளை கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.

இரண்டு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளை இந்தியா கைப்பற்றி உள்ள நிலையில் டி20 தொடர் இன்று முதல் ஆரம்பமாகியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது . அந்த அணியின் துவக்க வீரர்கள் பிரண்டன் கிங் மற்றும் கைல் மேயர்ஸ் இருவரும் நிதானமான மற்றும் சிறப்பான துவக்கத்தை அந்த அணிக்கு அமைத்துக் கொடுத்தனர்.

- Advertisement -

இந்நிலையில் ஆட்டத்தில் நான்காவது ஓவரை வீச வந்த இந்திய அணியின் லெக் ஸ்பின்னர் யுசேந்திர சஹால் தான் வீசிய முதல் பந்தியிலேயே கைல் மேயர்ஸ் விக்கெட்டையும் மூன்றாவது பந்தில் பிரண்டண் கிங் விக்கெட்டையும் வீழ்த்தி இந்தியாவிற்கு சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தார். மேலும் இது சஹாலுக்கு ஒரு சிறந்த கம் பேக் ஆகும்.

இந்திய அணிக்காக 186 நாட்களுக்குப் பிறகு அவர் விளையாடிய போட்டியில் விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவிற்கு பந்துவீச்சில் சிறப்பான ஒரு துவக்கத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.

இதன் மூலம் அவர் டி20 போட்டியில் 93 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இன்னும் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினால் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற வரலாறு படைக்க இருக்கிறார் சஹால்.

- Advertisement -

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா 5 டி20 போட்டிகளில் விளையாட இருப்பதால் இந்த சுற்றுப் பயணத்திலேயே 100 விக்கெட்டுகள் என்ற வரலாற்று சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் பிரதான ஸ்பின்னர் ஆக சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இருந்து வந்தனர். 2019 ஆம் ஆண்டின் உலகக் கோப்பைக்கு பிறகு அவர்களது பார்ம் சரியத் தொடங்கியது. இதனால் அணியில் இருந்து இருவருமே ஓரம் கட்டப்பட்டனர். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற t20 உலக கோப்பையிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2022 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக பந்து வீசிய சகால் 2022 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெற்றார். அந்த உலகக் கோப்பை போட்டியில் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அதற்கு அடுத்த தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.