வீடியோ.. 40 பந்தில் 101 ரன்.. 9 சிக்ஸர்.. புறக்கணிக்கப்படும் இந்திய வீரர் அதிரடி.. பேட்டை எறிந்ததால் கிளம்பிய சர்ச்சை.!

0
12935

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தால் மகாராஜா கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தமிழ்நாடு பிரீமியர் லீக் நடத்துவது போல் இந்தியாவில் இருக்கும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் மாநில அளவிலான டி20 போட்டிகளை நடத்தி வருகின்றன . இதேபோன்று கர்நாடக கிரிக்கெட் சங்கமும் மகாராஜா பிரிமியர் லீக் போட்டிகளை நடத்தி வருகிறது .

இந்தப் போட்டிகள் கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூரில் வைத்து நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் மைசூர் வாரியர் மற்றும் குல்பர்கா மைஸ்டிக்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் மைசூர்அணியின் தருண் நாயர் அதிரடியாக விளையாடி இந்த சீசனில் தனது முதல் சதத்தை பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

பெங்களூரின் சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் மைசூர் வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது . அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான ரவிக்குமார் சமர்த் மற்றும் கார்த்திக் இருவரும் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் ஆறு ஓவர்களில் 49 ரன்கள் எடுத்தனர் .

துவக்க ஜோடி சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த நிலையில் ஒன்பதாவது ஓவரில் அபினேஷ் என்பவர் வீசிய வந்து வீச்சில் கார்த்திக் 41 ரன்களில் ஆட்டம் இழந்தார் இவரைத் தொடர்ந்து ஆட வந்த தருண் நாயர் .மிகச் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் . எதிரணியினர் வீசிய பந்துகளை பௌண்டரி களுக்கும் சிக்ஸர்களுக்கும் விரட்டிய கருண் நாயர் மிகச் சிறப்பாக விளையாடி இந்த சீசனில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் . இவருக்கு துணையாக நின்று விளையாடிய ரவிக்குமார் சமரத் 80 ரண்களில் ஆட்டம் இழந்தார்,

அதிரடியாக விளையாடிய கருண் நாயர் நாற்பது பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார் இவர் 42 பந்துகளில் ஒன்பது சிக்ஸர்கள் மற்றும் ஏழு பவுண்டரிகளுடன் 107 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இவரது அதிரடியான ஆட்டத்தால் மைசூர் அணி 20 ஓவர்களில் 248 ரன்களை குவித்தது.

- Advertisement -

இந்திய அணிக்காக விளையாடிய முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அணிக்கு எதிராக முச்சதம் செஞ்சுரி அடித்தவர் ஆனாலும் ஏதேதோ காரணங்களால் இந்திய அணியில் இருந்து கடந்த ஆறு வருடங்களாக புறக்கணிக்கப்பட்டு வருகிறார். மேலும் வருகின்ற ரஞ்சித் டிராபி கிரிக்கெட் போட்டியிலும் கர்நாடகா அணியில் இருந்து விலகி விதர்ப்பா அணிக்காக விளையாட இருக்கிறார் கருண் நாயர் . மேலும் நேற்றைய போட்டியில் சதம் எடுத்த பிறகு தனது கிரிக்கெட் பேட்டை மைக்கை போடுவது போல் கீழே போட்டு வாயில் கை வைத்து அனைவரையும் அமைதியாக இருங்கள் என்று சொல்வது போல சைகை செய்தார். இவரது சைகை மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது . மேலும் தன் மீதான விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுத்துவிட்டேன் என்பது போல அவரது செயல் இருந்தது மேலும் அவர் கிரிக்கெட் பேட்டை தூக்கி எறிந்து கொண்டாடியதால் சர்ச்சையையும் கிளப்பி இருக்கிறது.

இதனை தொடர்ந்து ஆடிய குல்பர்கா மைஸ்டிக்ஸ் அணி 20 ஓவர்களில் 212 ரன்கள் மட்டுமே எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அந்த அணியில் மைக்கேல் 61 ரண்களும் அபுல் ஹசன் 54 ரன்கள் எடுத்தனர். மைசூர் அணியின் பந்துவீச்சில் மனிஷ் ரெட்டி கௌதம் மிஸ்ரா ஜெகதீஷ் சுஜித் மற்றும் குஷால் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்