548 ரன் டார்கெட்.. விட்டுக்கொடுக்காமல் போராடும் விதர்பா.. முசிர் கான் பவுலிங்கிலும் கலக்கல்.. ரஞ்சி பைனல்

0
379
Musheer

தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற வரும் ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில், மும்பை அணிக்கு எதிராக விதர்பா அணி விட்டுக் கொடுக்காமல் கடுமையாக சண்டையிட்டு வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி சர்துல் தாக்கூர் அதிரடியாக 75 ரன்கள் எடுக்க 224 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. விதர்பா அணியின் பந்துவீச்சாளர்கள் யாஷ் தாக்கூர் மற்றும் ஹார்ஸ் துபே இருவரும் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து பேட்டிங் செய்த விதர்பா அணி பரிதாபமாக 105 ரன்கள் மட்டுமே எடுத்து சுரண்டது. மும்பை அணியின் தரப்பில் தவால் குல்கர்னி, சாம்ஸ் முலானி மற்றும் தனுஷ் கோட்டியன் மூவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள். முதல் இரண்டு நாள் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமாக காணப்பட்டது. குறிப்பிட்ட இரண்டு நாளில் வேகப் பந்துவீச்சு சுழற் பந்துவீச்சு என இரண்டுமே ஈடுபட்டது. இதன் காரணமாக பேட்ஸ்மேன்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.

இதற்கடுத்து ஆடுகளம் ஓரளவுக்குபேட்டிங் செய்ய உதவியது என்றாலும் கூட, பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்தை புரிந்து கொண்டு அதற்கேற்றபடி உடனடியாக அனுபவத்தால் மாறி கொண்டார்கள். இதன் காரணமாக 119 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 418 ரன்கள் குறித்தது. ரகானே 73, ஸ்ரேயாஸ் ஐயர் 95, முசிர் கான் 136 இடங்கள் எடுத்தார்கள். ஹர்ஷ் துபே ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

மும்பை அணி விதர்பா அணிக்கு 538 ரன்கள் டார்கெட் கொடுத்தது. இரண்டு நாட்கள் மீதம் இருக்கின்ற காரணத்தினால் பகுதி பகுதியாக பிரித்து இந்தப் போட்டியை வெல்லும் நோக்கத்தில் விதர்பா அணி விளையாட ஆரம்பித்தது. நான்காவது நாளான இன்று அந்த அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்திருக்கிறது. மேலும் வெற்றிக்கு 290 ரன்கள் தேவைப்படுகிறது. இன்றைய நாளை ஆட்டம் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விதர்பா அணியின் விட்டுக் கொடுக்காத போராட்டம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்திருக்கிறது.

- Advertisement -

இன்றைய போட்டியில் அமன் முகாதே மற்றும் கருண் நாயர் இடையே 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூன்றாவது விக்கெட்டுக்கு அமைந்தது. இந்த பார்ட்னர்ஷிப்பில் அமன் முகாதே விக்கெட்டை பேட்டிங்கில் கலக்கி வரும் முஷிர் கான் கைப்பற்றினார். இதற்கு கருண் நாயர் மற்றும் அக்சை வட்கார் இடையே 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அடுத்த விக்கெட்டுக்கு அமைந்தது. இந்த பார்ட்னர்ஷிப்பிலும் கருண் நாயர் 220 பந்தில் 70 ரன்கள் முசிர் கான் அவரை அவுட் செய்து, பார்ட்னர்ஷிப்பை உடைத்தார்.

இதையும் படிங்க : கடைசியா பேரையே மாத்தப் போகும் ஆர்சிபி.. எப்படி தெரியுமா?.. அவர்களே சூசகமாக வெளியிட்ட வீடியோ

இதன் காரணமாகவே தற்பொழுது மும்பை அணி கோப்பையை வெல்லும் என்று அதிகபட்சம் எதிர்பார்க்க முடிகிறது. இவர் கைப்பற்றிய இரண்டு விக்கெட்டுகளும் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்பை நோக்கி நகர்ந்தன. ஒருவேளை இரண்டு விக்கெட்டுகள் குறைவாக விதர்பா அணி இழந்து இருந்தால், இன்றைய நாளில் அவர்களுடைய ஸ்கோர் கணிசமாக அதிகரித்திருக்கும். மேலும் நாளை போட்டியை வெல்வதற்கான அதிகபட்ச வாய்ப்பிலும் அவர்களே இருந்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டிங் மற்றும் பௌலிங் என கலக்கும் முசிர் கானுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.